எய்ட்ஸ் விழிப்புணர்வு!
எய்ட்ஸ் நோயாளிகள், திருநங்கைகளுக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார்.


எய்ட்ஸ் நோயாளிகள், திருநங்கைகளுக்கு விரைவில் ஓய்வூதியம் வழங்கப்படும் என்று முதல்வர் நாராயணசாமி தெரிவித்தார். சர்வதேச இளைஞர் தினத்தை முன்னிட்டு, புதுச்சேரியில் எய்ட்ஸ் கட்டுப்பாட்டு சங்கத்தின் சார்பில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக கல்லூரிகளில் செயல்பட்டு வரும் செந்நாடா மன்றங்களுக்கிடையே எச்.ஐ.வி, எய்ட்ஸ் மற்றும் ரத்ததான விழிப்புணர்வு நாடகப் போட்டிகள் திங்கள்கிழமை இரவு நடத்தப்பட்டன. பரிசு வழங்கும் நிகழ்ச்சி, கடற்கரை காந்தி திடலில் நடைபெற்றது.
இதில் முதல்வர் நாராயணசாமி கலந்துகொண்டு, வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசியது:
புதுச்சேரியில் எய்ட்ஸ் நோய் தொடர்பாக பொதுமக்களுக்கு அதிகளவில் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. மொத்தம் 1,500 பேரே எய்ட்ஸ் நோய் பாதிப்புக்கு ஆளானவர்கள். எய்ட்ஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான மருத்துவ உதவிகள் தடையின்றி தரப்பட்டு வருகின்றன. விரைவில் எய்ட்ஸ் நோயாளிகள், திருநங்கைகளுக்கும் ஓய்வூதியம் வழங்கப்படும் என்றார் நாராயணசாமி.
நாடகப் போட்டியில் ஷைன்ஸ் பாராமெடிக்கல் கல்லூரி, இதயா மகளிர் கலைக்கல்லூரி, மாவட்ட கல்வி ஆராய்ச்சி பயிற்சி நிறுவனம், அன்னை தெரசா சுகாதார பட்ட மேற்படிப்பு, ஈஸ்ட்கோஸ்ட் செவிலியர் கல்லூரி உள்ளிட்டவை பரிசுகளைப் பெற்றன.பாட்டுப் போட்டியில் இந்திராணி செவிலியர் கல்லூரி, மகாத்மா காந்தி பல் மருத்துவக் கல்லூரி, பாரதிதாசன் அரசு மகளிர் கலைக்கல்லூரி உள்ளிட்டவை முதல் மூன்றிடங்களைப் பெற்றன.
கஸ்தூரிபாய் காந்தி செவிலியர் கல்லூரி, மாஹே மகாத்மா காந்தி அரசு கலைக்கல்லூரி, பாண்டிச்சேரி பொறியியல் கல்லூரி உள்ளிட்டவை சிறந்த செந்நாடா மன்றங்களாக தேர்வு செய்யப்பட்டன.
இதன் ஒரு பகுதியாக விழிப்புணர்வு நாடகங்கள், கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன. சுகாதாரத் துறைச் செயலர் பாபு, இயக்குநர் டாக்டர் ராமன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...