உங்கள் இதயம் பத்திரமாக உள்ளதா? மாரடைப்பைத் தவிர்க்க சில வழிமுறைகள்!

இன்று (29.09.2019) உலக இதய நாள். மாரடைப்பைத் தடுக்கவும் ஆரோக்கியமாகவும் இருக்கவும் சில எளிய வழிகள்!
உங்கள் இதயம் பத்திரமாக உள்ளதா? மாரடைப்பைத் தவிர்க்க சில வழிமுறைகள்!

இன்று (29.09.2019) உலக இதய நாள். மாரடைப்பைத் தடுக்கவும் ஆரோக்கியமாகவும் வாழவும் சில எளிய வழிகளைப் பார்க்கலாம்.

முதலில் உயர் ரத்த அழுத்தம் உங்கள் இதயத்தை எவ்வாறு பாதிக்கிறது என்று தெரிந்து கொள்ளுங்கள்.

இதய நோய் மற்றும் ஸ்ட்ரோக்ஸ் பாதிப்பு 1990 முதல் 2016 வரை 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்கிறார்கள் நிபுணர்கள்.

உலகெங்கிலும் உள்ள பல நாடுகளில் மரணத்திற்கு முக்கிய காரணங்களில் ஒன்று மாரடைப்பு என்று ஆய்வுகள் கண்டறிந்துள்ளன, இந்தியாவும் இதற்கு விதிவிலக்கல்ல. 1990 முதல் 2016 வரை இதய நோய் மற்றும் ஸ்ட்ரோக்ஸ் பாதிப்பு 50 சதவிகிதம் அதிகரித்துள்ளது என்கிறார்கள் நிபுணர்கள். மேலும் அவர்கள் கூறுகையில், 'தேவையான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் முக்கியம். இதயத்தை ஆரோக்கியமாக வைத்திருப்பது ஒவ்வொருவரும் தங்கள் வாழ்க்கை முறையின் ஒரு பகுதியாக மாற்றுவது அவசியம்.

மாரடைப்பைத் தடுக்கவும் ஆரோக்கியமாக இருக்கவும் பின்வரும் விஷயங்களை கவனத்தில் வைத்துக் கொள்ளுங்கள்.

சத்தான உணவு

உங்கள் உணவில் புரதம், கார்போஹைட்ரேட்டுகள், கொழுப்புச் சத்துக்கள், வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் போன்ற ஊட்டச்சத்துக்கள் உள்ளனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். ஏராளமான பழங்கள் மற்றும் காய்கறிகள், பால் பொருட்கள், முட்டை / இறைச்சி, ஒமேகா-3 கொழுப்பு அமிலங்கள் நிறைந்த உணவுகள் மற்றும் தானியங்களை உங்கள் அன்றாட உணவில் சேர்க்கவும். கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்த அளவைப் பராமரிக்க, உப்பு, இனிப்பு மற்றும் சிவப்பு இறைச்சி உட்கொள்ளவதைக் குறைத்துக் கொள்ளுங்கள். 

உடற்பயிற்சி

சுறுசுறுப்பான வாழ்க்கை முறையை பின்பற்றுங்கள், இது உங்கள் எடையை கட்டுக்குள் வைத்திருப்பதுடன், ரத்த ஓட்டம், கொலஸ்ட்ரால் மற்றும் ரத்த அழுத்த அளவை மேம்படுத்த உதவும். நடை பயிற்சி மற்றும் உடற்பயிற்சி இதய ஆரோக்கியத்தை பராமரிக்கவும் உதவுகிறது என்பது கூடுதல் நன்மை. இதனால் மாரடைப்பு ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைகிறது. தினமும் யோகா செய்வதால் உங்கள் உடல் மட்டுமல்லாமல் மனதும் புத்துணர்வாகும் என்பது சர்வ நிச்சயம்.

மது மற்றும் புகைப்பழக்கத்தைத் தவிர்க்கவும்

ஆல்கஹால், புகை பிடித்தல் போன்ற தீங்கு விளைவிக்கும் போதைப் பொருட்களைத் தவிர்த்துவிடுங்கள். 

நிம்மதியான உறக்கம்

உங்கள் மனதை லகுவாக்கும் ஒரு முறையைக் கண்டுபிடிக்க முயற்சிக்கவும், ஏனெனில் மனஅழுத்தம் என்பது எல்லா வயதினருக்கும் மாரடைப்பு ஏற்படுவதற்கான மிகப் பெரிய காரணங்களில் ஒன்று. மன அழுத்த அளவைக் குறைக்க யோகா அல்லது தியானம் போன்றவற்றை தினமும் செய்ய வேண்டும். உடல் பருமன், நீரிழிவு மற்றும் உயர் ரத்த அழுத்தம் போன்ற கோளாறுகளின் அபாயத்தைக் குறைக்க, போதுமான தூக்கம் முக்கியமானது, உறக்கப் பிரச்னை, வாழ்க்கை முறைக் கோளாறு போன்றவை இறுதியில் மாரடைப்பு அல்லது பக்கவாதம் ஏற்படுத்தும். அதிகாலையில் எழுந்து, வேலைகளை முடித்து, இரவு சீக்கிரம் எழுந்து கொள்வது உடல் ஆரோக்கியத்துக்கு மிகவும் அவசியம். 
 
ரத்த சர்க்கரையை பராமரிக்கவும்

உங்கள் ரத்த அளவுகளில் அதிகப்படியான சர்க்கரை சேர்ந்துவிடுவது மிகவும் ஆபத்தானது, ஏனெனில் இது தமனிகளை சேதப்படுத்தும். உங்கள் ரத்த சர்க்கரை கட்டுப்பாட்டில் உள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளுங்கள். காரணம், சர்க்கரை நோயைத் தடுப்பதால் மாரடைப்பு ஏற்படுவதற்கான சாத்தியக்கூறையும் தவிர்க்க வேண்டும். 

மேற்கூறப்பட்டவை அனைத்தும் மாரடைப்பு அபாயத்தைக் குறைக்க உதவும் சில வழிமுறைகள். சில சமயங்களில், மாரடைப்பு தவிர்க்க முடியாது போகும். எவ்வாறாயினும், உயிர் இழப்பைத் தவிர்க்க நேரம் என்பது மிக மிக முக்கியமானது.

மாரடைப்பின் முக்கிய அறிகுறிகள்

  • அழுத்தம், பிசைதல் போன்று மார்பு வலி ஏற்படும். வலி பெரும்பாலும் மார்பின் மையத்தில் இருக்கும். இது தாடை, தோள்பட்டை, கைகள், முதுகு, வயிறு ஆகியவற்றிலும் உணரப்படலாம். சில நிமிடங்களுக்கு மேல் நீடிக்கலாம் அல்லது வந்து வந்து போகலாம்.
  • உணர்சியின்மை, வலித்தல் அல்லது கையில் கூச்ச உணர்வு (பொதுவாக இடது கை)
  • மூச்சுத் திணறல், சுவாசிப்பதில் சிரமம்
  • குளிருடன் கூடிய வியர்வை
  • தலைசுற்றல்
  • குமட்டல் (பெண்களில் அதிகம் காணப்படுகிறது)
  • வாந்தி
  • பலவீனம் அல்லது சோர்வு அல்லது பதற்றமான மனநிலை (குறிப்பாக வயதானவர்கள் மற்றும் பெண்களில்)

மாரடைப்பு ஆபத்தானது, ஆனால் ஆரம்பகால மருத்துவ கவனிப்பு ஒரு உயிரைக் காப்பாற்றும். யாராவது இத்தகைய அறிகுறிகளை அனுபவிப்பதை நீங்கள் கண்டால், 102, டயல் 108 அல்லது 1298 போன்ற அவசர மருத்துவ ஹெல்ப்லைன்களுக்கு உடனடியாக அழைக்கவும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com