திராவிட மாடல் ஆட்சியில் வடக்கு வாழ்கிறது என்ற நிலை மாறி, தெற்கு தான் நாட்டிற்கு வழிகாட்டுகிறது: மு.க. ஸ்டாலின்தமிழ்நாட்டுக்கு வடக்கில் இருந்துதான் ஆபத்து வரும் : திருவள்ளூர் பிரசாரத்தில் மு.க. ஸ்டாலின் பேச்சுஅதிமுக தலைவர்களான எம்ஜிஆர், ஜெயலலிதா உள்ளிட்டோரை அவமதித்தது திமுக: எடப்பாடி பழனிசாமிமறைந்த தலைவர்களை அவமதிக்கவில்லை: இபிஎஸ் பிரசாரம்தமிழகத்தில் பெண்களுக்கான பாதுகாப்பு கவலை அளிக்கிறது : பிரதமர் மோடி மாற்றத்திற்கானது தே.ஜ. கூட்டணி : பூத் கமிட்டி உறுப்பினர்களுடன் பேசிய பிரதமர் மோடிஅஸ்ஸாம் முதல்வர் ஊழல்வாதி: ராகுல் காந்தி விமர்சனம்
/

வாவ்! பச்சை மாங்காயில் இவ்ளோ நன்மைகளா!

பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும். ஆனால் மாங்காய் சாப்பிட்டால்

News image
Updated On :21 ஜூன் 2018, 11:00 am

பலருக்கும் மாங்காயைக் கண்டால் நாவில் இருந்து எச்சில் ஊறும். ஆனால் மாங்காய் சாப்பிட்டால் உடல் வெப்பம் அதிகரிக்கும், பருக்கள் வரும் என்று பலரும் அதை வாங்கி சாப்பிடமாட்டார்கள். உங்களுக்கு ஒன்று தெரியுமா? மாங்காயில் ஏராளமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன. உண்மையில் இதனை சாப்பிட்டால் நாம் சந்திக்கும் பல பிரச்னைகளில் இருந்து விடுபடலாம். மாங்காயை சாப்பிட்டால் பெறும் நன்மைகள் என்னவென்று பட்டியலிடப்பட்டுள்ளது. அதைப் படித்து தெரிந்து கொண்டு, இனிமேல் மாங்காயை வேண்டாம் என்று தவிர்க்காதீர்கள்.

Story image

கோடையில் அதிகப்படியான வெப்பத்தால் உடலின் நீர்ச்சத்தை இழந்து, அதனால் உடல் வெப்பமடைந்து காய்ச்சல் அல்லது சில நேரங்களில் சுய நினைவை இழக்க நேரிடும். ஆனால் மாங்காயை திண்பதன் மூலம், அதில் உள்ள சக்தி வாய்ந்த குளிர்மிக்க உட்பொருள், உடலில் நீர்ச்சத்தை சீராகப் பராமரித்து, இப்பிரச்னையைத் தடுக்கும்.

மாங்காயில் பொட்டாசியம் அதிகம் உள்ளது. இது உடலில் எலக்ட்ரோலைட் அளவை பராமரிக்க உதவி, அதனால் இரத்த அழுத்தத்தைக் கட்டுப்பாட்டுடன் வைத்து, இதய நோயின் அபாயத்தில் இருந்து பாதுகாக்கும்.

Story image

பச்சை மாங்காயில் ஆவியாகக் கூடிய உட்பொருட்கள் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இது செரிமான திரவத்தின் உற்பத்தியைத் தூண்டி, செரிமான பிரச்னைகளில் இருந்து தடுத்து, செரிமான மண்டலத்தின் ஆரோக்கியத்தை மேம்படுத்தும். ஆகவே கோடையில் வயிற்று பிரச்னைகளை சந்திக்காமல் இருக்க வேண்டுமானால், மாங்காய் துண்டுகளை சாப்பிடுங்கள்.

பருவ நிலை மாற்றம் அல்லது ஏதேனும் வைரஸ் தொற்றுக்களால் நீங்கள் அடிக்கடி நோய்வாய்ப்படுபவராயின், பச்சை மாங்காயை சாப்பிடுங்கள். ஏனெனில் பச்சை மாங்காயில் வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உள்ளது. 

Story image

நெஞ்செரிச்சலால் அவஸ்தைப்பட்டு வந்தால், பச்சை மாங்காயை சாப்பிடுங்கள். அந்தப் பிரச்னையில் இருந்து உடனடி நிவாரணம் கிடைக்கும்.

Story image

பச்சை மாங்காயை மதிய வேளையில் ஒரு துண்டு சாப்பிட்டால், மதிய வேளையில் வரும் தூக்கத்தைத் தவிர்க்கலாம் என்று நிபுணர்கள் கூறுகின்றனர். 

Story image

பச்சை மாங்காய் கல்லீரல் சம்பந்தமான பிரச்னைகளைத் தடுக்கும். ஏனெனில் மாங்காய் பித்தநீரின் சுரப்பை அதிகரிக்கும் மற்றும் குடலை பாக்டீரியா தொற்றுக்களில் இருந்து பாதுகாக்கும். பச்சை மாங்காய் இரத்தம் சம்பந்தமான பிரச்னையில் இருந்து விடுதலை தரும். ஏனெனில் மாங்காயில் வைட்டமின் சி அதிகம் உள்ளது. அதிலும் மாங்காயை உட்கொண்டு வந்தால், இரத்த நாளங்களின் நெகிழ்வுத்தன்மை அதிகரிக்கும் மற்றும் புதிய இரத்த செல்கள் உருவாகும்.

மாங்காயில் உள்ள ஆன்டி-ஆக்ஸிடன்ட் கொலாஜனின் கூட்டுச்சேர்க்கையில் முக்கிய பங்கை வகிக்கிறது. ஆகவே மாங்காயை சாப்பிடுவதால் சருமத்தின் பொலிவு அதிகரிப்பதோடு, முதுமையும் தள்ளிப் போகும்.

Story image

மாங்காயில் உள்ள உட்பொருட்கள், சருமத் துளைகளில் எண்ணெய் மற்றும் அழுக்குகள் தேங்குவதைத் தடுக்கும். 

பச்சை மாங்காயை துண்டுகளாக்கி நீரில் போட்டு கொதிக்க வைத்து, பின் அந்த நீரைக் கொண்டு இரவில் படுக்கும் முன் முகத்தைக் கழுவி, மறுநாள் காலையில் வெதுவெதுப்பான நீரால் முகத்தைக் கழுவ, முகப்பரு பிரச்னையில் இருந்து விடுபடலாம்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.