புது தில்லி: பாலியல் குற்றவாளிகளின் பெயர், வயது, கைரேகை, மரபணு மாதிரி உள்ளிட்ட விவரங்களை பதிவு செய்ய வகை செய்யும் வழிகாட்டுதல்கள் வகுக்கப்பட்டு வருவதாக மாநிலங்களவையில் மத்திய அரசு தெரிவித்தது.
இது தொடர்பாக மாநிலங்களவை திமுக உறுப்பினர் கே.பி. ராமலிங்கம் எழுப்பியிருந்த கேள்விக்கு மத்திய உள்துறை இணை அமைச்சர் ஹரிபாய் பார்திபாய் சௌத்ரி புதன்கிழமை எழுத்துப்பூர்வமாக அளித்துள்ள பதிலில்:
பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் விவரங்களை பதிவு செய்ய வகை செய்யும் வழிகாட்டுதல்களை மத்திய அரசு வகுத்து வருகிறது. இது தொடர்பாக பல்வேறு அமைச்சகங்கள், அமைப்புகள் ஆகியவற்றுடனும் மாநில அரசுகள், பொதுமக்களுடனும் ஆலோசனை நடத்தி கருத்துகள் வரவேற்கப்பட்டுள்ளன.
வரைவு வழிகாட்டுதல்களின்படி பாலியல் குற்றச்செயல்களில் ஈடுபடுவோரின் பெயர், புனைப்பெயர், அழைக்கும் பெயர், அவர்களுடன் தொடர்பில் உள்ளவர்கள், அவர்களின் முகவரிகள், தொலைபேசி எண்கள், தாற்காலிகமாக தங்கும் இடம், பயணம், குடியுரிமை ஆவணங்கள், வேலை செய்யும் இடம், ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட பிற உரிமங்கள் என அனைத்துத் தகவல்களையும் பெற்று பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமைச்சர் ஹரிபாய் பார்திபாய் சௌத்ரி கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

