புது தில்லி : ஹெலிகாப்டர் ஊழலில் சோனியாவின் பெயரை தொடர்புபடுத்தி மாநிலங்களவையை அதிரச் செய்த சுப்ரமணியன் சுவாமி, இன்று மீண்டும் சர்ச்சைக்குரிய வகையில் கருத்துத் தெரிவித்து அமளிக்கு வழிவகுத்தார்.
மாநிலங்களவையில் இன்று அவர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்தைத் தொடர்ந்து காங்கிரஸ் கட்சியினர் கடும் அமளியில் ஈடுபட்டனர்.
அலிகார் முஸ்லிம் பல்கலைத் தொடர்பான விவாதம் ஒன்று மாநிலங்களவையில் முன் வைக்கப்பட்டது. அப்போது பேசிய சுப்ரமணியன் சுவாமி, சர்ச்சைக்குரிய கருத்தைத் தெரிவித்தார்.
அதனால், அதிருப்தி அடைந்த காங்கிரஸ் உறுப்பினர்கள் கோஷம் எழுப்பினர். அவர்களை குரியன் சமாதானம் செய்ய முயற்சி செய்தார். அது தோல்வி அடைந்தது.
மாநிலங்களவைத் தலைவர் பி.கே. குரியன், சுப்ரமணியன் சுவாமி இதுபோன்ற கருத்துக்களைத் தெரிவிக்கக் கூடாது என்று அறிவுறுத்தினார்.
"உங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டியது இதுக்கும். சுப்ரமணியன் சுவாமி.. நீங்கள் தேவையில்லாமல் அமளியைத் தூண்டும் வகையில் பேசுகிறீர்கள். நீங்கள் தூண்டுகிறீர்கள்" என்று குரியன் கோபமாக எச்சரிக்கை விடுத்தார்.
மேலும், சுப்ரமணியன் சுவாமி கூறிய கருத்துக்களை, ஊடகங்கள் செய்தியாக்க வேண்டாம் என்றும், அவர் அங்கிருந்த செய்தியாளர்களுக்கு உத்தரவிட்டார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


