கர்நாடகத்தில் தமிழர்கள் சுட்டுக்கொலை: மு.க. ஸ்டாலின் கண்டனம்! வந்தே மாதரம் பாடலுக்கு அவமதிப்பு! காங். மன்னிப்பு கேட்க வேண்டும்: சுவேந்து அதிகாரிதமிழக மீனவர்கள் தொடர் கைது: தீர்வுகாண அமைச்சர் ஸ்ரீநாத் தில்லி பயணம்சென்னையில் இன்றும் நாளையும் மழைக்கு வாய்ப்பு!கோவையில் இளைஞர் கொலை: குடும்பத்தினருக்கு ரூ. 6 லட்சம் நிவாரணம், அரசுப் பணிசுதந்திர நாள் அணிவகுப்புப் பணியின்போது காவலர் பலி: ரூ. 30 லட்சம் நிதியுதவி!பெண்களை இழிவுபடுத்தும் வகையில் நயினாரின் பேச்சு: சிபிஎம் கண்டனம்!
/

மத சுதந்திரம் குறித்து இந்தியாவில் ஆய்வு: அமெரிக்க குழுவுக்கு விசா மறுப்பு

மத சுதந்திரம் குறித்து இந்தியாவில் ஆய்வு செய்ய விரும்பிய அமெரிக்காவைச் சேர்ந்த குழுவினருக்கு இந்திய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது.

News image
Updated On :24 ஜனவரி 2024, 10:11 pm IST

மத சுதந்திரம் குறித்து இந்தியாவில் ஆய்வு செய்ய விரும்பிய அமெரிக்காவைச் சேர்ந்த குழுவினருக்கு இந்திய அரசு விசா வழங்க மறுத்துவிட்டது.

அமெரிக்காவில் இயங்கி வருகிறது சர்வதேச மதசுதந்திரத்துக்கான ஆணையம். இந்த ஆணையத்தைச் சேர்ந்த மூன்று உறுப்பினர்கள் இன்று முதல் இந்தியாவில் பிராயணம் செய்து, மத தலைவர்கள், சமூக அமைப்புகள், அரசு சாரா தொண்டு நிறுவனங்களுடன் இந்தியாவில் நிலவும் மதசுதந்திரம் குறித்து ஆலோசனை நடத்தவிருந்தனர்.

இந்நிலையில் அக்குழுவினருக்கு விசா வழங்க இந்திய அரசு மறுப்பு தெரிவித்துவிட்டது.

''இந்திய அரசு எங்களுக்கு விசா வழங்காததால் நாங்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்துள்ளோம்'' என அந்த அமைப்பின் தலைவர் ராப்ர்ட் பி ஜார்ஜ் கூறினார்.

அமெரிக்க அரசுக்கு தோழமையான, பண்முகதன்மை உடைய, குறிப்பிட்ட சமய நம்பிக்கை இல்லாத மற்றும் ஜனநாயக நாடான இந்தியா எங்களுக்கு விசா வழங்கும் என நம்பிக்கை தெரிவித்தார் ஜார்ஜ்.

இந்தியாவில் 2014 ஆம் ஆண்டு முதல் சீரழிந்து வரும் மத சுதந்திரம் குறித்து மத குழுக்கள், சமூகவிலாளர்கள், தொண்டு நிறுவனங்கள் அளித்துள்ள அறிக்கையின்படி இந்தியாவுக்கு வந்து ஆய்வு செய்வதற்கு எங்கள் அமைப்பு தொடர்ந்து முயற்சிக்கும் என்றார் ஜார்ஜ்.

சர்வதேச மதசுதந்திர அமைப்புக்கு கடந்த காலங்களில் விசா வழங்கப்படவில்லை. கடந்த ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியின்போது உலக அளவிலான மதசுந்திரம் குறித்த ஆண்டறிக்கை தயாரிப்பதற்காக இந்தியா வர விரும்பிய குழுவினருக்கு விசா வழங்கப்படவில்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.