புது தில்லி : ஹெலிகாப்டர் பேர ஊழல் விவகாரம் தொடர்பாக இந்திய விமானப் படையின் முன்னாள் தளபதி எஸ்.பி. தியாகியிடம் மத்தியப் புலனாய்வு அமைப்பு இன்று விசாரணை நடந்து வருகிறது.
மத்தியப் புலனாய்வு அலுவலகத்தில் விசாரணைக் குழு முன்பு இன்று காலை தியாகி ஆஜரானார். அவரிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இந்திய விமானப் படையின் முன்னாள் துணைத் தளபதி ஜே.எஸ்.குஜ்ராலிடம் சிபிஐ அதிகாரிகள் கடந்த சனிக்கிழமை விசாரணை நடத்திய நிலையில், இன்று எஸ்.பி. தியாகியிடம் விசாரணை மேற்கொள்ளப்படுகிறது.
அதிமுக்கியப் பிரமுகர்களுக்காக பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த ஹெலிகாப்டர்களை வாங்க இத்தாலி நாட்டின் அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தில் ரூ.360 கோடி லஞ்சமாக கைமாறியதாக குற்றச்சாட்டு எழுந்தது.
இந்தக் குற்றச்சாட்டு தொடர்பாக விமானப் படையின் முன்னாள் தலைமைத் தளபதி தியாகி உள்பட 13 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.
இந்த வழக்கில் விசாரணை நடத்துவதற்காக விமானப் படையின் முன்னாள் துணைத் தளபதி ஜே.எஸ்.குஜ்ரால் சனிக்கிழமையும், முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகி திங்கள்கிழமையும் (மே.2) நேரில் ஆஜராகும்படி சிபிஐ அழைப்பாணை அனுப்பியது.
அதன்படி, தில்லியில் உள்ள சிபிஐ அலுவலகத்தில் சனிக்கிழமை குஜ்ரால் விசாரணைக் குழு முன்பு ஆஜரானார்.
"குஜ்ராலிடம் 8 மணி நேரம் விசாரணை நடத்தப்பட்டது. விசாரணைக்கு மீண்டும் அழைக்கும்போது ஆஜராகுமாறு அவரிடம் தெரிவிக்கப்பட்டது' என்று சிபிஐ வட்டாரங்கள் தெரிவித்தன.
குற்றச்சாட்டு தொடர்பாக தியாகியிடமும், குஜ்ராலிடமும் கடந்த 2013-ஆம் ஆண்டு விசாரணை நடத்தப்பட்டபோதிலும், இத்தாலி நீதிமன்றம் சமீபத்தில் வெளியிட்ட ஆணையின்படி அவர்களிடம் மீண்டும் விசாரணை மேற்கொள்வது அவசியம் என சிபிஐ கருதுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

ரூ. 56,900 சம்பளத்தில் சுங்கவரித் துறையில் வேலை வேண்டுமா? - உடனே விண்ணப்பிக்கவும்!

ஈரானில் மற்றொரு இஸ்ரேலிய உளவாளிக்கு மரண தண்டனை நிறைவேற்றம்!

வருகிறது புதிய ரியல்மி சி100எக்ஸ்! எப்போது அறிமுகம்?

தில்லி பேட்டிங்; பஞ்சாப் பந்துவீச்சு: 2 அணிகளிலும் மாற்றமில்லை!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை

