விடுமுறை எடுப்பது மிக மோசமான விஷயம்: சுமித்ரா மகாஜன்

மக்களவை உறுப்பினர்கள் அவ்வப்போது அவைக்கு வராமல் விடுப்பு எடுத்து வருவது மிக மோசமானது என்று சுமித்ரா மகாஜக் கருத்துக் கூறியுள்ளார்.
Updated on
1 min read

புது தில்லி : மக்களவை உறுப்பினர்கள் அவ்வப்போது அவைக்கு வராமல் விடுப்பு எடுத்து வருவது மிக மோசமானது என்று சுமித்ரா மகாஜக் கருத்துக் கூறியுள்ளார்.

மக்களவை இன்று காலை கூடியதும், கேள்வி நேரத்தின் போது, பெட்ரோலியப் பொருட்களின் விலைகள் குறித்து கேள்வி முன் வைக்கப்பட்டது. அப்போது கேள்விகளை முன் வைத்த பாஜக உறுப்பினர் நளின் குமார் கட்டீல் (கர்நாடகா), சிபிஐ-எம் கட்சி உறுப்பினர் ஸ்ரீமதி டீச்சர் (கேரளா) ஆகியோர் அவைக்கு வரவில்லை.

இதனைப் பார்த்த அவைத் தலைவர் சுமித்ரா மகாஜன், உறுப்பினர்கள் அவையில் பங்கேற்காதது மிக மோசமான செயல் என்று கூறினார்.

5 மாநில தேர்தலையொட்டி, தமிழகம் மற்றும் கேரளா உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த மக்களவை உறுப்பினர்கள், ஏப்ரல் 25ம் தேதி கூட்டம் தொடங்கியது முதல் அவையில் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com