கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு: ஐ,நாவில் நவாஸ் ஷெரிப் பேச்சுக்கு இந்தியா பதிலடி!

தீவிரவாதத்தை தேசிய கொள்கையாக பின்பற்றி வரும் நாடு என்று பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.

News image
Updated On :22 செப்டம்பர் 2016, 9:25 am

DIN

தீவிரவாதத்தை தேசிய கொள்கையாக பின்பற்றி வரும் நாடு என்று பாகிஸ்தானை இந்தியா கடுமையாக சாடியுள்ளது.

ஐ.நா.வின் 71-ஆவது பொது சபை கூட்டம் இன்று நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப், காஷ்மீரில் இந்தியா மனித உரிமை மீறல்களில் ஈடுபடுவதாக குற்றம் சாட்டினார்.   

இதற்கு பதில் அளித்துப் பேசிய ஐ.நாவுக்கான இந்திய முதன்மை செயலர் ஈனம் காம்பிர், உலகின் மிக மோசமான மனித உரிமை மீறல் என்பது தீவிரவாதம்தான். இதை ஒரு தேசிய கொள்கையாக பின்பற்றி வரும் பாகிஸ்தான் ஒரு தீவிரவாத நாடு என்று ஆக்ரோஷமாக பதிலளித்தார்.

இந்தியா தொடர்பாக பாகிஸ்தான் தொடர்ந்து இது போன்ற அவதூறுகளில் ஈடுபட்டு வருகிறது என்றும் அவர் தெரிவித்தார். செப்டம்பர் 11 தாக்குதல் சம்பவம் தொடங்கி, சமீபத்திய நியூயார்க் குண்டு வெடிப்பு வரை அதில் ஈடுபட்டவர்கள்  பாகிஸ்தானில் அடைக்கலமும், அரவணைப்பும் பெற்றிருந்ததையும் அவர் சுட்டிக்காட்டினார்.  

உலகம் முழுவதும் இருந்து தீவிரவாதச் செயல்பாடுகளில்  ஆர்வம் காட்டுபவர்களை பாகிஸ்தான் ஈர்த்து வருகிறது. இதன் விளைவுகள்  உலகம் முழுவதும் உணரப்படுமென்றும் அவர் தனது பேச்சில் எடுத்துரைத்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.