கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

90 நாட்களுக்கு 4ஜி சேவை இலவசம்: ஏர்டெல் அதிரடி அறிவிப்பு!

புதிதாகக் களம்  இறங்கியிருக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியை சமாளிப்பதற்காக, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்கு 4ஜி சேவை இலவசம்... 

News image
Updated On :23 செப்டம்பர் 2016, 9:15 am

DIN

புதிதாகக் களம்  இறங்கியிருக்கும் ரிலையன்ஸ் ஜியோவின் போட்டியை சமாளிப்பதற்காக, தன்னுடைய வாடிக்கையாளர்களுக்கு 90 நாட்களுக்கு 4ஜி சேவை இலவசம் என்று ஏர்டெல் நிறுவனம் அதிரடி அறிவிப்பை  வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஏர்டெல்லின் இந்தியா மற்றும் தெற்கு ஆசிய பிராந்திய செயல் இயக்குனர் அஜய் பூரி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்திருப்பதாவது:-

புதிதாக அறிமுகப்படுத்தப்படும் இந்த சலுகையானது ஏற்கனவே உள்ள வாடிக்கையாளர்களுக்கு ரூ.1495 என்ற விலையிலும், புதிய வாடிக்கையாளர்களுக்கு ரூ.1494 என்ற விலையிலும் கிடைக்கும்.    

4ஜி வசதி கொண்ட அலைபேசிளை  பயன்படுத்துபவர்கள் அதிக அளவில் இணைய வசதியை பயன்படுத்துவதால், டேட்டா அதிக அளவில் செலவாகும். இவர்களை மனதில் கொண்டுதான் இந்த திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

தற்போது தில்லி வட்டத்தில் அறிமுகமாகி உள்ள இந்த திட்டம்  வெகு விரைவில் பிற தொலைத்தொடர்பு வட்டங்களுக்கும் விரிவு செய்யபப்டும்.

இவ்வாறு அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.