கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

பாகிஸ்தான் நடிகர்கள் தீவிரவாதிகள் அல்ல: பாலிவுட் நடிகர் சல்மான்கான் பேட்டி!

பாகிஸ்தான் நடிகர்கள் என்பவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்று  பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 செப்டம்பர் 2016, 11:11 am

DIN

பாகிஸ்தான் நடிகர்கள் என்பவர்கள் தீவிரவாதிகள் அல்ல என்று  பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

மஹாராஷ்டிராவில் ராஜ் தாக்கரேவின் தலைமையில் செயல்படும் 'மகாராஷ்டிரா நவ நிர்மாண் சேனா' கட்சியின் கலை  இலக்கிய பிரிவு 'மகாராஷ்டிரா நவ நிர்மாண் சித்ரபாத் கரமாச்சாரி சேனா' ஆகும்.  .உரி ராணுவ முகாம் தாக்குதலைத் தொடர்ந்து  இப்பிரிவானது, பாகிஸ்தானியநடிகர்கள் பாலிவுட் படங்களில் நடிப்பதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தது. மேலும் படப்பிடிப்பிற்காக மும்பையில் தங்கியிருந்த இரண்டு பாகிஸ்தானிய நடிகர்கள் வெளியேற வேண்டும் என்றும் மிரட்டல் விடுத்தது.அதன் தொடர்ச்சியாக பாகிஸ்தான் நடிகர்கள் நடித்து வெளியாகும் பாலிவுட் படங்களை தடுத்து நிறுத்திடுவோம் என்றும் கருத்து தெரிவித்திருந்தது.

இந்நிலையில் இதற்க்கு பதில் அளிக்கும் விதத்தில் பிரபல பாலிவுட் நடிகர் சல்மான் கான் சமீபத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பு ஒன்றில்  கருத்து தெரிவித்திருந்தார். அப்பொழுது அவர் கூறியதாவது:

தீவிரவாதிகளுக்கு எதிராக நாம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளை நியாயப்படுத்த முடியும். ஆனால் பாகிஸ்தான் நடிகர்கள் என்பவர்கள் தீவிரவாதிகள் அல்லர். இந்திய அரசாங்கம்தான் அவர்களுக்கு விசாவும், அனுமதியும் வழங்குகிறது.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.