கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

உ.பி.: மாவட்டத் தலைநகரங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்: அதிகாரிகளுக்கு யோகி ஆதித்யநாத் உத்தரவு

உத்தரப் பிரதேசத்தில் மாவட்டத் தலைநகரங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.

News image
Updated On :7 ஏப்ரல் 2017, 8:41 pm

DIN

உத்தரப் பிரதேசத்தில் மாவட்டத் தலைநகரங்களில் 24 மணி நேரமும் மின்சாரம் இருப்பதை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்
டும் என்று மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார்.
மின்துறை, தொழில் துறை உள்ளிட்ட முக்கிய அரசுத் துறைகளின் ஆய்வுக் கூட்டம் யோகி ஆதித்யநாத் தலைமையில் லக்னௌவில் நடைபெற்றது. இதில், ஆதித்யநாத் பேசியதாவது:
மாநிலத்திலுள்ள அனைத்து மாவட்டத் தலைநகரங்களிலும் 24 மணி நேரமும் மின்சாரம் இருப்பதை மின்துறை அதிகாரிகள் உறுதி செய்ய வேண்டும். அதேபோல், அனைத்து வட்டங்களிலும் 20 மணி நேரமும், ஊரகப் பகுதிகளில் 18 மணி நேரமும் மின் விநியோகம் செய்யப்பட வேண்டும். இதில், ஊரகப் பகுதிகளில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும். அடுத்த 100 நாள்களுக்குள் 5 லட்சம் புதிய மின் இணைப்புகளை வழங்க வேண்டும். நகர்ப்பகுதிகளில் பழுதடைந்துள்ள மின்மாற்றிகளை 24 மணி நேரத்துக்குள் மாற்ற வேண்டும். ஊரகப் பகுதிகளிலுள்ள பழுதடைந்துள்ள மின்மாற்றிகளை 48 மணி நேரத்துக்குள் மாற்ற வேண்டும்.
முந்தைய அகிலேஷ் யாதவ் அரசில் செயல்படுத்தப்பட்ட பல வளர்ச்சித் திட்டங்களுக்கு சமாஜவாதி கட்சியின் பெயர் வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்டுள்ளது. மேலும், தேசிய ஊரக சுகாதாரத் திட்டத்தின்கீழ் செயல்படுத்தப்பட்ட ஆம்புலன்ஸ் சேவைக்கு 'சமாஜவாதி ஆம்புலன்ஸ் சேவை' என்று பெயரிடப்பட்டுள்ளது.
எனவே, 'சமாஜவாதி' என்று தொடங்கும் அனைத்து திட்டங்களிலிருந்தும் அந்த வார்த்தையை நீக்கிவிட்டு 'முதல்வர்' என்ற வார்த்தையைப் பொருத்த வேண்டும்.
தொழில்முனைவோர் சந்தித்து வரும் பிரச்னைகள் முன்னுரிமை அடிப்படையில் தீர்க்கப்படும். முதலீடுகளை ஈர்ப்பது, புதிதாக தொழிற்சாலைகளை அமைப்பது ஆகியவற்றை செயல்படுத்துவதற்காக புதிய தொழில் முதலீட்டுக் கொள்கை அறிமுகப்படுத்தப்படும். தொழில் தொடங்குவதற்கான நடைமுறைகள் எளிமைப்படுத்தப்படும் என்றார் யோகி ஆதித்யநாத்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.