எல்லையில் பாக். ராணுவம் அத்துமீறி தாக்குதல்

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லையையொட்டி உள்ள கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை அத்துமீறி இரண்டு முறை தாக்குதல் நடத்தியது.
Updated on
1 min read

ஜம்மு-காஷ்மீர் மாநிலம், பூஞ்ச் மாவட்டத்தில் சர்வதேச எல்லையையொட்டி உள்ள கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவம் வியாழக்கிழமை அத்துமீறி இரண்டு முறை தாக்குதல் நடத்தியது.
இதுகுறித்து ராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாவது: பூஞ்ச் மாவட்டம், திக்வார் பகுதியில் உள்ள 3 கிராமங்களில் பாகிஸ்தான் ராணுவத்தினர் வியாழக்கிழமை காலை அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். நமது ராணுவ வீரர்கள் உரிய பதிலடி கொடுத்தனர். சுமார் 3 மணி நேரம் வரை துப்பாக்கிச் சண்டை நீடித்தது. இந்நிலையில், அன்றைய தினம் மாலை காரி கர்மாரா பகுதியில் அந்நாட்டு ராணுவ வீரர்கள், பாதுகாப்புச் சாவடிகள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
ரஜௌரி மாவட்டம், கேரி பகுதியில் கடந்த சனிக்கிழமையும், ஷாபூர் பகுதியில் அதற்கு மறுநாளும் பாகிஸ்தான் ராணுவத்தினர் அத்துமீறித் தாக்குதல் நடத்தினர். கேரி பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் ராணுவ உயரதிகாரி ஒருவரும், 3 வீரர்களும் வீரமரணம் அடைந்தனர். 
ருக் சாக்ரி பகுதியில் கடந்த திங்கள்கிழமை இந்திய ராணுவம் பதிலடி கொடுத்ததில் 3 பாகிஸ்தான் வீரர்கள் கொல்லப்பட்டனர்; ஒருவர் காயமடைந்தார். ஜம்மு-காஷ்மீர் எல்லையில், இந்த ஆண்டு இதுவரை போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறி 881 முறை பாகிஸ்தான் ராணுவத்தினர் தாக்குதல் நடத்தினர். இந்தத் தாக்குதல்களில் 14 ராணுவ வீரர்கள், எல்லைப் பாதுகாப்புப் படை வீரர்கள் உள்பட 30 பேர் பலியாகிவிட்டனர்.
இந்தியா-பாகிஸ்தான் இடையே கடந்த 2003-ஆம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தம் செய்துகொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com