சரணடையுங்கள் அல்லது மரணத்தை எதிர்கொள்ளுங்கள்: ஈரானுக்கு டிரம்ப் எச்சரிக்கைகாங்கிரஸுக்கு ஒரு மாநிலங்களவை சீட் தருவதாக முதல்வர் உறுதி! செல்வப்பெருந்தகை தகவல்ஈரான் மீது இஸ்ரேல் திடீர் தாக்குதல்! கமேனியின் நிலை என்ன?அண்ணா அறிவாலயத்தில் திமுக கூட்டணி கட்சிகள்! தொகுதிப்பங்கீடு பேச்சுவார்த்தை தீவிரம்!!சென்னையில் இன்று 5 புறநகா் மின்சார ரயில் முழுதும் ரத்துதிமுக-காங்கிரஸ் இன்று தொகுதி பங்கீட்டுப் பேச்சு உக்ரைன் தாக்குதலால் ரஷியாவில் மின்வெட்டு: 50,000 போ் பாதிப்புஇஸ்ரேலை விட்டு வெளியேற அமெரிக்கா்களுக்கு அவசர உத்தரவுஇன்று கிராம கோயில் பூசாரிகள் மாநாடு: முதல்வா் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறாா்
/

வெங்கய்யா நாயுடுவுக்கு ஆதரவு: அதிமுக அம்மா அணி முடிவு!

விரைவில் நடைபெறவுள்ள  துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளரான வெங்கய்யா நாயுடுவுக்கு ஆதரவு அளிப்பது என்று அதிமுக அம்மா அணி முடிவெடுத்துள்ளது.

News image
Updated On :29 ஜனவரி 2024, 4:29 pm

DIN

சென்னை: விரைவில் நடைபெறவுள்ள  துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளரான வெங்கய்யா நாயுடுவுக்கு ஆதரவு அளிப்பது என்று அதிமுக அம்மா அணி முடிவெடுத்துள்ளது.

நாட்டின் அடுத்த துணை ஜனாதிபதி யார் என்பதை தேர்வு செய்வதற்கான தேர்தல் அடுத்த மாதம் 5-ஆம் தேதி நடைபெற உள்ளது. இதில் ஆளும் பாரதிய ஜனதா கட்சியின் சார்பாக மத்திய அமைச்சர் வெங்கய்யா நாயுடுவும், காங்கிரஸ் தலைமையிலான எதிர்கட்சிகளின் கூட்டணி சார்பாக,மேற்கு வங்க மாநில முன்னாள் ஆளுநரும், மகாத்மா காந்தியின் பேரனுமான கோபாலகிருஷ்ண காந்தி போட்டியிடுகின்றனர்.

நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் பாஜகவின் ராம்நாத் கோவிந்துக்கு அதிமுக அம்மா அணி ஆதரவளித்த நிலையில் துணை ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு வாக்களிப்பது என்பது குறித்து தலைமைச் செயலகத்தில் அதிமுக எம்பிக்களுடன் முதல்வர் பழனிசாமி ஆலோசனை இன்று நடந்தது.

இந்த கூட்டத்தில் நாடாளுமன்ற துணை சபாநாயகர் தம்பிதுரை, தமிழக அமைச்சர்கள் வேலுமணி, தங்கமணி, சீனிவாசன் மற்றும் அன்பழகன் ஆகியோர் கலந்து கொண்டனர்.   

கூட்டத்தின் முடிவில் துணை ஜனாதிபதி தேர்தலில் பாஜக கூட்டணி வேட்பாளரான வெங்கய்யா நாயுடுவுக்கு ஆதரவு அளிப்பது என்று அதிமுக அம்மா அணி முடிவெடுத்துள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.