பெங்களூர் சிறையில் கன்னடம் கற்கிறார் சசிகலா: டிஐஜி ரூபா தகவல்
பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலர் சசிகலா, கன்னடம் மொழியை கற்று வருவதாக சிறைத் துறை முன்னாள் டிஐஜி ரூபா கூறியுள்ளார்.


பெங்களூர்: பெங்களூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள அதிமுக அம்மா அணி பொதுச் செயலர் சசிகலா, கன்னட மொழியை கற்று வருவதாக சிறைத் துறை முன்னாள் டிஐஜி ரூபா கூறியுள்ளார்.
சொத்துக் குவிப்பு வழக்கில் தண்டனை பெற்று பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருக்கும், சசிகலாவுக்கு சிறையில் பல சலுகைகள் வழங்கப்பட்டிருப்பதாக குற்றம்சாட்டிய டிஐஜி ரூபா செய்தியாளர்களிடம் பேசினார்.
அப்போது, பரப்பன அக்ரஹாரா மத்திய சிறைக்கு இரண்டு முறை சென்று ஆய்வு நடத்தினேன். அப்போது மகளிர் சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் சசிகலாவுக்கு 5 அறைகள் ஒதுக்கப்பட்டிருப்பதையும், அதில் சசிகலாவுன் பொருட்கள் வைக்கப்பட்டிருப்பதையும் நேரில் பார்த்தேன்.
சிறையில் ஆய்வு செய்த போது, சசிகலாவிடம் பேசினேன். நீங்கள் கன்னடம் கற்று வருகிறீர்களா? என்றேன். அதற்கு அவர் ஆமாம், கற்று வருகிறேன் என்றார். உங்கள் அறையில் இருக்கும் சாமி படங்களை காட்டுங்கள் என்றேன். நான் கன்னடத்தில் சொன்னதை அவர் புரிந்து கொண்டு அவற்றை காட்டினார்.
நான் கன்னடத்தில் பேசியதை சசிகலா ஓரளவுக்கு புரிந்து கொண்டார். ஆனால், சரியாக பதில் சொல்ல முடியவில்லை. இதனால் அவரிடம் என்னால் சரியாக பேச முடியவில்லை என்று ரூபா கூறியுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...