காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியா காந்தி விலகுகிறார்?

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்பதற்கு வசதியாக, அந்தப் பதவியிலிருந்து சோனியா காந்தி வரும் அக்டோபர் மாதம் 15-ஆம் தேதிக்கு முன்பாக ராஜிநாமா செய்யலாம் எனத் தெரிகிறது.
காங்கிரஸ் தலைவர் பதவியிலிருந்து சோனியா காந்தி விலகுகிறார்?

காங்கிரஸ் கட்சியின் தலைவர் பொறுப்பை ராகுல் காந்தி ஏற்பதற்கு வசதியாக, அந்தப் பதவியிலிருந்து சோனியா காந்தி வரும் அக்டோபர் மாதம் 15-ஆம் தேதிக்கு முன்பாக ராஜிநாமா செய்யலாம் எனத் தெரிகிறது.
தில்லியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், அக்கட்சியின் உள்கட்சி தேர்தலை வரும் அக்டோபர் மாதம் 15-ஆம் தேதிக்குள் நடத்தி முடிப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆஸாத் செய்தியாளர்களிடம் விளக்கினார்.
அப்போது அவரிடம், கட்சியின் துணைத் தலைவராக இருக்கும் ராகுல் காந்தியை தலைவராக்குவது குறித்து காரியக் கமிட்டி கூட்டத்தில் விவாதிக்கப்பட்டதா? என்று கேள்வியெழுப்பப்பட்டது. அதற்கு அவர், "கட்சியின் அமைப்பு ரீதியிலான தேர்தலை நடத்தும் அட்டவணைக்கு காரியக் கமிட்டி கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது' என்று எதிர்மறையாக பதிலளித்தார். மேலும் அவர், ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக்குவது குறித்து மட்டும் விவாதிக்கவில்லை என்றார்.
காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டி கூட்டம் கடந்த நவம்பர் மாதம் நடைபெற்றபோது, ராகுல் காந்தியை கட்சியின் தலைவராக்க வேண்டும் என்று அக்கட்சியின் தலைவர்கள் பலர் வெளிப்படையாக கருத்து வெளியிட்டனர். முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங், பாதுகாப்புத் துறை முன்னாள் அமைச்சர் ஏ.கே. அந்தோணி ஆகியோரும் இந்தகருத்தை தீவிரமாக வலியுறுத்தினர்.
காங்கிரஸ் தலைவராக இருந்த சீதாராம் கேசரி, கடந்த 1998-ஆம் ஆண்டு நடைபெற்ற அக்கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றப்பட்டார். அதைத் தொடர்ந்து, காங்கிரஸ் கட்சியின் தலைவரான சோனியா காந்தி, அந்தப் பதவியில் 19 ஆண்டுகளாக இருந்து வருகிறார். ஜெய்ப்பூரில் கடந்த 2013-ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் காரியக் கமிட்டிக் கூட்டத்தில், அக்கட்சியின் துணைத் தலைவராக ராகுல் காந்தி தேர்வு செய்யப்பட்டார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com