காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு

நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்ய இன்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் சிறைத் தண்டனையை

News image
Updated On :7 ஜூன் 2017, 6:29 am

DIN

புதுதில்லி: நீதிபதி கர்ணனுக்கு விதிக்கப்பட்ட சிறைத் தண்டனையை ரத்து செய்ய இன்று உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளதுடன் சிறைத் தண்டனையை உறுதி செய்தது.

உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சிலருக்கு எதிராக ஊழல் புகார்களைத் தெரிவித்து தமிழகத்தைச் சேர்ந்தவரும், கொல்கத்தா உயர் நீதிமன்ற நீதிபதியுமான கர்ணன், பிரதமர் நரேந்திர மோடிக்கு புகார் மனு அனுப்பினார். இதைத்தொடர்ந்து சர்ச்சைக்குள்ளான இந்த விவகாரத்தை தாமாக முன்வந்து, வழக்காக பதிவு செய்து உச்ச நீதிமன்றம் விசாரித்து வருகிறது.

இந்த வழக்கில் நேரில் ஆஜராகுமாறு உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை நீதிபதி கர்ணன் ஏற்கவில்லை. மேலும், தன் மீதான வழக்கை விசாரிக்கும் நீதிபதிகள் அமர்வுக்கு சிறை தண்டனையும் அபராதமும் விதித்து நீதிபதி கர்ணன் உத்தரவிட்டார்.

இதையடுத்து உச்ச நீதிமன்ற உத்தரவை அவமதிப்பு செய்ததாகக் கூறி நீதிபதி கர்ணனுக்கு ஆறு மாதங்கள் சிறை தண்டனை விதித்து உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. அவரை கைது செய்யும்படி மேற்கு வங்க காவல்துறை தலைமை இயக்குநருக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து சென்னையில் தங்கியிருந்த நீதிபதி கர்ணனை கைது செய்ய கொல்கத்தா நகர காவல்துறையின் தனிப்படை தமிழகம் வந்தது.

இதைத்தொடர்ந்து, ஆந்திர மாநிலத்துக்கு அவர் சென்றிருக்கலாம் என்ற தகவல் அடிப்படையில் அங்கு சென்று தேடிப்பார்த்த தனிப்படை, மீண்டும் சென்னை திரும்பியது.

தனக்கு விதிக்கப்பட்ட ஆறு மாத சிறை தண்டனையை திரும்பப் பெற வேண்டும் எனக் கோரி நீதிபதி கர்ணன் தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

இந்நிலையில், கொல்கத்தா உயர்நீதிமன்ற நீதிபதி கர்ணனுக்கு வழங்கப்பட்ட ஆறு மாத சிறைத் தண்டனை ரத்து செய்ய உச்சநீதிமன்றம் மறுப்பு இன்றும் தெரிவித்துள்ளது. 4-வது முறையாக ரத்து செய்ய மறுத்த உச்சநீதிமன்றம், சிறைத் தண்டனையை உறுதி செய்தது.

இதையடுத்து நீதிபதி கர்ணனை கைது செய்யும் நடவடிக்கையில் கொல்கத்தா நகர காவல்துறையின் தனிப்படை போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.