இந்தியாவுக்கு 95 லட்சம் பீப்பாய் எண்ணெய் அனுப்ப ரஷியா தயார்! காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ராகுலின் வெளிநாடு பயணம் நியாயமானது: காங்கிரஸ்

ராகுல் காந்தியின் வெளிநாடு பயணம் நியாயமானதுதான்; அவர் தனது குடும்பத்தினரைச் சந்திக்க வெளிநாடு செல்வதில் என்ன தவறு உள்ளது'' என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.

News image
Updated On :14 ஜூன் 2017, 9:18 pm

DIN

ராகுல் காந்தியின் வெளிநாடு பயணம் நியாயமானதுதான்; அவர் தனது குடும்பத்தினரைச் சந்திக்க வெளிநாடு செல்வதில் என்ன தவறு உள்ளது'' என்று காங்கிரஸ் கட்சி கருத்து தெரிவித்துள்ளது.
காங்கிரஸ் கட்சியின் துணைத் தலைவர் ராகுல் காந்தி திடீரென செவ்வாய்க்கிழமை வெளிநாட்டுக்கு புறப்பட்டுச் சென்றார்.
தனது 47ஆவது பிறந்த நாளை, இத்தாலியில் இருக்கும் அவரது பாட்டி மற்றும் குடும்பத்தினருடன் சேர்ந்து கொண்டாடவே, வெளிநாடு பயணம் சென்றதாக கூறப்படுகிறது.
ராகுலின் வெளிநாட்டுப் பயணம் குறித்து காங்கிரஸ் கட்சியின் உத்தரப் பிரதேச மாநிலத் தலைவர் ராஜ் பப்பர் சுட்டுரையில் வெளியிட்ட பதிவுகளில், 'ராகுல் காந்தி தனது தனிப்பட்ட வாழ்க்கை தொடர்பான வெளிநாட்டுப் பயணம் குறித்து சுட்டுரை மூலம் தெரிவித்திருந்தார்; அதுபோல், பிரதமர் தனது வெளிநாட்டுப் பயணங்களின்போது யார்-யாரை சந்திக்கிறார் என்பது குறித்து தெரிவிக்க வேண்டியது அவரது பணியாகும்' எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் மக்கள் தொடர்புப் பிரிவு தலைவர் ரண்தீப் சுர்ஜேவாலா கூறுகையில், 'ராகுல் காந்தி தனது பாட்டியை சந்திக்க சென்றுள்ளார்; குடும்பத்தில் இருக்கும் முதியவர்கள் மீது அக்கறை செலுத்தும் நமது பழைய கலாசாரத்துக்கு மதிப்புக் கொடுக்க வேண்டும். ராகுல் காந்தியின் கடமை அல்லது சுட்டுரையில் அவர் வெளியிட்ட பதிவு அல்லது அவரது தனிப்பட்ட வாழ்க்கை குறித்து யாரும் குற்றம் தெரிவிக்க முடியாது' எனத் தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.