காஷ்மீரில் அமைச்சர் வீட்டின் மீது பயங்கரவாதிகள் தாக்குதல்
காஷ்மீரில் அமைச்சர் வீட்டின் மீது பயங்கரவாதிகள் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


காஷ்மீரில் அமைச்சர் வீட்டின் மீது பயங்கரவாதிகள் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
காஷ்மீர் மாநிலம், அனந்த்நாக் மாவட்டத்தில் வசித்து வருபவர் சையது பரூக். மக்கள் ஜனநாயக கட்சித் தலைவரான இவர் ஹஜ் மற்றும் வகுப்பு வாரிய துறை அமைச்சராகவும் பதவி வகிக்கிறார். இந்நிலையில் நேற்று மாலை இவரது வீட்டின் மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர்.
இந்த தாக்குதலில் பாதுகாப்புப் பணியில் இருந்த காவலர் ஒருவர் காயமடைந்தார். தாக்குதலின் போது அமைச்சர் சையது பரூக் வீட்டில் இல்லாத காரணத்தால் எவ்வித அசம்பாவிதமும் ஏற்படவில்லை. இத்தாக்குதலையடுத்து அமைச்சர் வீட்டைச் சுற்றிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
அமைச்சர் வீட்டின் மீதே தாக்குதல் நடைபெற்றுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மத்திய மற்றும் தெற்கு காஷ்மீரில் நேற்று மட்டும் மூன்று பயங்கரவாத தாக்குதல் சம்பவங்கள் அரங்கேறியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...