லோகமான்யா திலக் எக்ஸ்பிரஸ் ரயில் தடம் புரண்டு விபத்து
உத்திரப்பிரதேசத்தில் மும்பை லோகமான்யா திலக் அதிவிரைவு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அனைவரும்


உத்திரப்பிரதேசத்தில் மும்பை லோகமான்யா திலக் அதிவிரைவு ரயிலின் 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது. இதில் பயணிகள் அனைவரும் அதிர்ஷ்டவசமாக உயிர்தப்பினர்.
மதியம் 2 மணியளவில் உன்னோவ் ரயில் நிலையத்தின் 3வது நடைமேடைக்கு வந்த 22121 மும்பை லோகமான்யா திலக் அதிவிரைவு ரயிலின் B2க்கும் B11க்கும் இடையே உள்ள 8 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் 11 பயணிகளுக்கு லேசான காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மீட்பு படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், பெரியளவில் பாதிப்பு எதுவும் இல்லை என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ரயில் மெதுவாக வந்ததால், ஒரு பெரிய சோகம் தவிர்க்கப்பட்டதாக ரயில்வே கண்காணிப்பாளர் நேஹா பாண்டே கூறியுள்ளார்.
பயணிகளுக்கு உணவு மற்றும் நீர் வழங்கப்பட்டுள்ளதாகவும், பயணங்கள் தொடர மாற்று ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், இந்த விபத்தில் தீவிரவாத செயல்பாடுகள் ஏதாவது இருக்குமா என்ற கோணத்தில் தீவிரவாதத் தடுப்புப்பிரிவினரும் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளனர்.
0522 -263 5639 என்ற உதவி எண்களும், லக்னோவிலிருந்து உன்னோவுக்கு ஒரு நிவாரண ரயில் வரவழைக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
விபத்துக்கான காரணம் குறித்து ரயில்வே போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...