அகஸ்டா வெஸ்ட்லேண்ட் ஊழல்: அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க சத்தீஸ்கர் அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு
இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் நடைபெற்றதாகக் கூறப்படும்


இத்தாலியைச் சேர்ந்த அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்திடமிருந்து சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்குவதற்கான ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டதில் நடைபெற்றதாகக் கூறப்படும் முறைகேடு தொடர்பான அசல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும் என்று சத்தீஸ்கர் மாநில அரசுக்கு உச்ச நீதிமன்றம் வியாழக்கிழமை உத்தரவிட்டது. இதுகுறித்து தகவல்கள் தெரிவிப்பதாவது:
குடியரசுத் தலைவர் உள்ளிட்ட மிகுந்த முக்கியஸ்தர்கள் (விவிஐபி-க்கள்) பயணிப்பதற்கான சொகுசு ஹெலிகாப்டர்களை வாங்குவதற்காக, மத்திய அரசுக்கும், அகஸ்டா வெஸ்ட்லேண்ட் நிறுவனத்துக்கும் இடையே கடந்த 2013-ஆம் ஆண்டு ஒப்பந்தம் கையெழுத்தானது.
எனினும், அந்த ஒப்பந்தத்தை மேற்கொள்வதற்காக அரசியல்வாதிகள், அதிகாரிகள், ராணுவ அதிகாரிகளுக்கு ரூ.370 கோடி வரை லஞ்சம் கொடுக்கப்பட்டதாகக் குற்றம் சாட்டப்பட்டதையடுத்து, அந்த ஒப்பந்தம் ரத்து செய்யப்பபட்டது.
இதுதொடர்பாக இந்தியக் கடற்படையின் முன்னாள் தலைமைத் தளபதி எஸ்.பி. தியாகி, துணைத் தளபதி ஜே.எஸ். குஜரால் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக மத்திய புனாய்வு அமைப்பு (சிபிஐ) கடந்த செப்டம்பர் மாதம் முதல் தகவல் அறிக்கையை தாக்கல் செய்தது.
அந்த முதல் தகவலறிக்கையில் எஸ்.பி. தியாகியின் உறவினர் சஞ்சீவ் தியாகி, வழக்குரைஞர் கெளதம் கேதான் உள்ளிட்ட பலரது பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த நிலையில், இந்த வழக்கு குறித்த பொது நல மனுவை வியாழக்கிழமை பரிசீலித்த உச்ச நீதிமன்றம், இந்த ஊழல் தொடர்பாக சத்தீஸ்கர் மாநில அரசிடம் உள்ள அசல் ஆவணங்களை சமர்ப்பிக்குமாறு அந்த மாநில அரசுக்கு உத்தரவிட்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...