மத்திய அமைச்சர் அதாவலேயின் தாயார் காலமானார்
மத்திய அமைச்சர் ராமதாஸ் அதாவலேயின் தாயார் ஹெளசாபாய் பந்து அதாவலே (88), உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார்.


மத்திய அமைச்சர் ராமதாஸ் அதாவலேயின் தாயார் ஹெளசாபாய் பந்து அதாவலே (88), உடல்நலக் குறைவு காரணமாக வியாழக்கிழமை காலமானார்.
மும்பை புறநகரான பந்த்ராவில் உள்ள குரு நானக் மருத்துவமனையில் உடல்நல பாதிப்புக்கு சிகிச்சை பெறுவதற்காக ஹெளசாபாய் பந்து அனுமதிக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில், அவர் வியாழக்கிழமை காலை 7 மணியளவில் காலமானார் என்று அதாவலேயின் மக்கள் தொடர்புத் துறை அதிகாரி மயூர் பர்கர் தெரிவித்தார். இறுதிச்சடங்கு வியாழக்கிழமை மாலை நடைபெற்றது. ராமதாஸ் அதாவலேவின் இந்திய குடியரசுக் கட்சி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகிக்கிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...