முப்படையினருடன் தீபாவளி கொண்டாடும்: நிர்மலா சீதாராமன்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முப்படை வீரர்களுடன் இணைந்து தீபாவளிப் பண்டிகையை கொண்டாட இருக்கிறார்.
முப்படையினருடன் தீபாவளி கொண்டாடும்: நிர்மலா சீதாராமன்
Updated on
1 min read

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் முப்படை வீரர்களுடன் இணைந்து தீபாவளிப் பண்டிகையை கொண்டாட இருக்கிறார்.
இது தொடர்பாக பாதுகாப்புத் துறை அமைச்சக வட்டாரங்கள் கூறியதாவது:
இந்தியாவின் மும்படைகளும் நிலைகொண்டுள்ள ஒரே இடமான அந்தமான்}நிகோபார் தீவுகளுக்கு வரும் 18}ஆம் தேதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் செல்கிறார். அங்கு, வட இந்தியாவில் தீபாவளிப் பண்டிகை கொண்டாடப்படும் தினமான 19}ஆம் தேதி, முப்படையினருடன் இணைந்து பண்டிகையை அவர் கொண்டாட இருக்கிறார். தொடர்ந்து முப்படைகளின் செயல்பாடுகளையும் அவர் ஆய்வு செய்கிறார்.
வரும் 24, 25}ஆம் தேதிகளில் பிலிப்பின்ஸ் நாட்டுக்கு நிர்மலா சீதாராமன் பயணம் மேற்கொள்ள இருக்கிறார். அந்நாட்டுத் தலைவர்களுடன் ராணுவ ஒத்துழைப்பு குறித்து அவர் பேச்சு நடத்த இருக்கிறார். பாதுகாப்புத் துறை அமைச்சரான பிறகு அவரது முதல் வெளிநாட்டுப் பயணம் இது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com