துண்டுச்சீட்டை பார்க்காமல், காங்கிரஸ் கட்சித் தலைவர் ராகுல் காந்தியால் தொடர்ந்து 15 நிமிடங்கள் கூட பேச முடியாது என்று பாஜக விமர்சித்துள்ளது.
மக்களவையில் 15 நிமிடங்கள் கூட பிரதமர் நரேந்திர மோடியால் பேச இயலவில்லை என்று ராகுல் காந்தி தெரிவித்திருந்த கருத்துக்கு பாஜக இவ்வாறு பதிலடி கொடுத்துள்ளது.
இதுகுறித்து உத்தரப் பிரதேச மாநில பாஜக செய்தித் தொடர்பாளர் ராகேஷ் திரிபாதி, பிடிஐ செய்தியாளருக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:
துண்டுச்சீட்டை பார்க்காமல் ராகுலால் தொடர்ந்து 15 நிமிடங்கள் கூட பேச முடியாது. பொது நிகழ்ச்சியில் பேசும்போதோ அல்லது நாடாளுமன்றத்தில் பேசும்போதோ, தொடர்ந்து 15 நிமிடங்களுக்கு அவரால் பேச இயலாது.
அப்படியிருக்கும்போது, பிரதமர் குறித்து அவர் பேசுவது நகைப்பைத்தான் ஏற்படுத்துகிறது. நாடாளுமன்றத்தை செயல்பட விடாமல் முடக்குவதற்கு விசித்திரமான செயலில் எதிர்க்கட்சியினர் ஈடுபட்டனர். நாடாளுமன்றத்தில் ராகுல் காந்தியை பேச விடாமல் தடுத்த கட்சி, எந்த கட்சியாக இருக்கும் என கருதுகிறீர்கள். அது நிச்சயம், காங்கிரஸ் கட்சிதான்.
ராகுல் காந்தியிடம் வளர்ச்சித் தொடர்பாக மாணவர்கள் கேள்விகளை கேட்கின்றனர். அப்போது பிரதமர் நரேந்திர மோடி மீதும், உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் மீதும் அவர் குற்றம்சுமத்துகிறார். அமேதி, ரேபரேலி ஆகிய மக்களவைத் தொகுதிகளில் ஏன் அடிப்படை வசதிகள் கூட செய்து தரப்படாமல் உள்ளது என்ற கேள்விக்கு ராகுல் காந்தி பதிலளிக்க வேண்டும். அந்த 2 தொகுதிகளிலும் பெரும்பாலும் சோனியா காந்தி குடும்பத்தினர்தான் எம்.பி.க்களாக இருந்துள்ளனர். மத்தியிலும் மிக நீண்ட காலத்துக்கு சோனியா காந்தி குடும்பத்தினர்தான் ஆட்சியில் இருந்துள்ளனர். அப்படியிருந்தும் ஏன் இந்த நிலை, அமேதி, ரேபரேலி தொகுதிகளுக்கு ஏற்பட்டது?
தனது தொகுதி தொடர்பான பிரச்னை குறித்து ராகுல் காந்தி இதுவரை எழுப்பியதே இல்லை. இதுதொடர்பாக பிரதமர் நரேந்திர மோடி, உத்தரப் பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோருக்கு ஒருமுறை கூட அவர் கடிதம் எழுதியதும் இல்லை. அவர்களை நேரில் சந்தித்து தனது தொகுதி பிரச்னை குறித்து ராகுல் காந்தி பேசியதுமில்லை.
அதேநேரத்தில், மத்தியிலும், உத்தரப் பிரதேசத்திலும் பாஜக அரசு அமைந்தபிறகு, அமேதி, ரேபரேலி ஆகிய தொகுதிகளுக்கு ஏராளமான வளர்ச்சித் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. 2019ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில், பாஜக பெரும்பான்மை பலத்துடன் வெற்றி பெற்று, மத்தியில் மீண்டும் ஆட்சியமைக்கும். அந்தத் தேர்தலில், காங்கிரஸ் கட்சிக்கு பாடம் புகட்டுவதற்கு அமேதி, ரேபரேலி தொகுதி மக்கள் தயாராகி விட்டனர் என்றார் ராகேஷ் திரிபாதி.
முன்னதாக, லக்னௌவில் ராகுல் காந்தி செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை பேசியபோது, நாடு முழுவதும் பிரதமர் சுற்றுப்பயணம் செய்கிறார்; ஆனால் மக்களவையில் பேசுவதற்கு அவருக்கு 15 நிமிடங்கள் கூட நேரமில்லை. மக்களவையை 15 நிமிடங்கள் கூட அவரால் எதிர்கொள்ள இயலவில்லை. மக்களவையில் எழுப்பப்படும் கேள்விகளுக்கு அவரிடம் பதில்
இல்லை எனத் தெரிவித்திருந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது
அமைச்சரவை விரிவாக்க நிகழ்ச்சியில் தமிழ்த்தாய் வாழ்த்தை முதலில் பாட ஆளுநர் மறுப்பா?

நீட் விவகாரம்: பாஜக மாநிலத் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்ட காங்கிரஸ் தொண்டர்கள்!

தமிழ்நாட்டில் கூட்டணியாட்சி! அமைச்சரவையில் பிரதிநிதித்துவம் இல்லாத 19 மாவட்டங்கள்!
ஸ்ரீநாத் - மீன்வளம், மரிய வில்சன் - நிதித்துறை! அமைச்சர்களுக்கு துறைகள் ஒதுக்கீடு!!
விடியோக்கள்
Podcast | அமைச்சரவை விரிவாக்கம்: அதிமுக எதிர்காலம் என்ன? | News and Views | Epi - 37 |

அமைச்சரவையில் அதிமுக எம்எல்ஏ-க்கள்?: அமைச்சர் ஆதவ் அர்ஜுனா விளக்கம்

சூர்யவன்ஷியால் மாறிப்போன போர்க்களம்: இழுத்தடிக்கும் பிளே ஆஃப் வாய்ப்புகள்!


