கூட்டுறவு வங்கிகள் அளித்த ரூ.9,448.61 கோடி விவசாயக் கடனை தள்ளுபடி செய்ய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது என்று கர்நாடக முதல்வர் ஹெச்.டி.குமாரசாமி தெரிவித்தார்.
இதுகுறித்து பெங்களூரில் செய்தியாளர்களிடம் அவர் வியாழக்கிழமை கூறியதாவது:
கூட்டுறவு வங்கிகளில் ரூ.1 லட்சம் வரை பெறப்பட்ட விவசாயக் கடன் ரத்து செய்ய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்மூலம், இந்த ஆண்டு ஜூலை மாதம் 10-ஆம் தேதி வரை கூட்டுறவு வங்கிகளில் கடன் பெற்ற 20.38 லட்சம் விவசாயிகள் பலனடைவார்கள். விவசாயக் கடன் தள்ளுபடி செய்வதற்கு நிதிப் பற்றாக்குறை ஏற்படவில்லை. அடுத்த அமைச்சரவை கூட்டத்தில் பொதுத் துறை வங்கிகளில் பெறப்பட்ட விவசாயக் கடனை ரத்து செய்வது குறித்து முடிவு செய்யப்படும்.
சுதந்திர தினம் அல்லது விநாயகர் சதுர்த்தி தினத்தில் இதுதொடர்பாக முறையான அறிவிப்பை விவசாயிகளுக்கு தெரிவிப்பேன்.
விவசாயக் கடன் தள்ளுபடி விவகாரத்தில் மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எனக்கு எதிராக பல்வேறு குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகிறது. மக்களுக்காகவும், விவசாயிகளுக்காவும் செயல்பட வேண்டும் என்று கர்நாடக அரசு உறுதிபூண்டுள்ளது என்றார் குமாரசாமி.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
மீண்டும் இணையும் டிசி கூட்டணி!

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly
ரியோ நடிக்கும் ராம் இன் லீலா படத்தின் டிரைலர் அறிவிப்பு!

காதல் காதல் காதல் தொடரின் ஒளிபரப்பு நேரம் மாற்றம்!
விடியோக்கள்

உங்களுக்கும் சிபிஐ வழக்கு இருக்கு! Udhayanidhi Vs N Anand! | TN Assembly


