முதல்வர் விஜய் - சங்கீதா விவாகரத்து வழக்கு வாபஸ்!முதல்வர் விஜய்க்கு ஒரு தலைகுனிவு ஏற்பட்டால் தமிழ்நாடு வெகுண்டெழும்! பிரேமலதா பேச்சுவினாத்தாள் கசிவு கொலையை விட மிகக் கொடூர குற்றம்: நீதிமன்றம்பொருளாதார ஆலோசனைக் குழுவில் பிரவீண் சக்ரவர்த்தி உள்ளாரா? திமுக எம்எல்ஏ கேள்வி!தவெக ஆட்சியில் கமிஷன்! திமுக குற்றச்சாட்டுக்கு அமைச்சர் ஆனந்த் சவால்!தமிழக மக்களுக்காக அவமானப்படவும் தயார்! பெங்களூர் பயணம் குறித்து விஜய்!மேக்கேதாட்டு விவகாரம்: அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்டாதது ஏன்? உதயநிதி கேள்வி!
/

கருணாநிதி நினைவஞ்சலிக் கூட்டம்: தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்கமாட்டார் என அறிவிப்பு

சென்னையில் இன்று நடைபெறும் கருணாநிதி நினைவஞ்சலிக் கூட்டத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

News image
Updated On :30 ஜனவரி 2024, 10:08 pm IST

சென்னையில் இன்று நடைபெறும் கருணாநிதி நினைவஞ்சலிக் கூட்டத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியின் நினைவஞ்சலிக் கூட்டம் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.ஏ. திடலில் மாலை 4 மணியளவில் நடக்கிறது. க. அன்பழகன் தலைமையில் திமுக பொதுச் செயலாளர் க.அன்பழகன் தலைமை வகிக்கிறார். அக்கட்சியின் தலைவர் மு.க. ஸ்டாலின் முன்னிலை வகிக்கிறார். பொருளாளர் துரைமுருகன் வரவேற்கிறார். 

இக்கூட்டத்தில், முன்னாள் பிரதமர் தேவெ கெளடா, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி,  மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர் குலாம் நபி ஆசாத், தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத்பவார், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலப் பொதுச் செயலாளர் சீதாராம் யெச்சூரி, இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளர் எஸ்.சுதாகர் ரெட்டி, தேசிய மாநாட்டு கட்சித் தலைவர் பரூக் அப்துல்லா, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவர் கே.எம். காதர் மொகிதீன், மாநிலங்களவை திரிணமூல் காங்கிரஸ் தலைவர் டெரிக் ஓ பிரையன் ஆகியோர் பங்கேற்க உள்ளனர்.

பிகார் முதல்வர் நிதிஷ் குமார், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு, தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால், புதுச்சேரி முதல்வர் நாராயணசாமி ஆகியோரும் பங்கேற்பார்கள் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் கருணாநிதியின் நினைவஞ்சலிக் கூட்டத்தில் தில்லி முதல்வர் அரவிந்த் கேஜரிவால் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தில்லியில் கேஜரிவாலின் உறவினர் மறைந்ததையடுத்து நிகழ்ச்சியில் அவர் பங்கேற்க மாட்டார் என்று ஆம்ஆத்மி தரப்பில் அதில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது.  
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.