திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

வேலைக்குப் போகாம வீட்டிலேயே இருக்க விரும்புவோர் இந்த செய்தியைப் படிக்க வேண்டாம்

தெலங்கானா உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. 

News image
Updated On :1 டிசம்பர் 2018, 11:01 am

தெலங்கானா உள்ளிட்ட மாநில சட்டப்பேரவைகளுக்கு தேர்தல் பணிகள் மும்முரமாக நடந்து கொண்டிருக்கிறது. 

இந்த நிலையில் சரியாக இந்த நேரத்தில் பிஆர்எஸ் லெஜிஸ்லேடிவ் ஆராய்ச்சி மையம் நடத்திய ஆய்வில் தெரிய வந்திருக்கும் தகவல் பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தலாம். 

உண்மை சில  நேரங்களில் கசக்கத்தான் செய்யும் என்பது சினிமா வசனம் என்றாலும் அது உண்மைதான்.

வாருங்கள் அந்த கசப்பான உண்மை என்னவென்று பார்க்கலாம்..

அதாவது இந்தியாவில் உள்ள 26 மாநில சட்டப்பேரவைகளின் பணி நாட்கள் பற்றியதே அந்த ஆய்வு. அதில் கேரளாவும், கர்நாடகாவும் முதல் இடத்தில் உள்ளன. இவ்விரு சட்டப்பேரவைகளும் ஆண்டுக்கு சராசரியாக 45 நாட்கள் பணியாற்றியுள்ளன. இதற்கு அடுத்தபடியாக 45 பணி நாட்களுடன் மகாராஷ்டிரம் 2வது இடத்தில் உள்ளது. 

நாகாலாந்து மாநிலம் தான் ஆண்டுக்கு வெறும் 10 நாட்கள் மட்டுமே செயல்பட்டு பட்டியலின் கடைசி இடத்தில் உள்ளது. தமிழகம் இதில் ஆண்டுக்கு 38 பணி நாட்களுடன் இடம்பெற்றுள்ளது.

இதற்காகத்தான் முதலிலேயே சொல்லியிருந்தோம், வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருக்க விரும்புவோர் இதனைப் படிக்க வேண்டாம் என்று.. இப்போது  தேர்தலில் போட்டியிடலாமா? நாகாலாந்து போகலாமா என்றெல்லாம் சிந்திப்பதற்கு நிர்வாகம் பொறுப்பாகாது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.