திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

மகா கூட்டணி: சோனியாவை சந்திக்கிறார் மெஹபூபா முஃப்தி?

இந்த கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தி கலந்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. 

News image
Updated On :8 டிசம்பர் 2018, 5:55 am

எதிர்வரும் 2019 மக்களவைத் தேர்தலில் பாஜக வீழ்த்த காங்கிரஸ் தலைமையில் ஒத்த கருத்துடைய கட்சிகள் ஒன்றிணையும் மகா கூட்டணியை அமைக்க காங்கிரஸ் முயன்று வருகிறது. இதுதொடர்பாக டிசம்பர் 10-ஆம் தேதி புதுதில்லியில் ஆலோசனைக் கூட்டம் நடைபெறவுள்ளது. பாஜக அல்லாத கட்சிகளை ஒன்றிணைக்கும் தீவிர முயற்சியில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு செயல்பட்டு வருகிறார்.

இந்நிலையில், இந்த கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீர் முன்னாள் முதல்வரும், பிடிபி கட்சித் தலைவருமான மெஹபூபா முஃப்தி கலந்துகொள்ளப்போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறிப்பாக அவரை இதில் இணைக்கும் முயற்சியில் சந்திரபாபு நாயுடு பேசி வருவதாக தெலுங்கு தேசம் கட்சி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

மேலும் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இந்த மகா கூட்டணி பேச்சுவார்த்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படுத்தாது என தெரிவித்தனர். இதில் 7 மாநில முதல்வர்கள் மற்றும் 10 தேசிய, மாநில கட்சிகளின் பிரதிநிதிகள் கலந்துகொள்ளப்போவதாகக் கூறப்படுகிறது.  

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.