ராமர் கோவில் - பாபர் மசூதி விவகாரத்தினை ஒரு நிலப் பிரச்னையாக மட்டுமே பார்க்கிறோம்: உச்ச நீதிமன்றம்! 

ராமர் கோவில் - பாபர் மசூதி விவகாரத்தினை ஒரு நிலப் பிரச்னையாக மட்டுமே பார்க்கிறோம் என்று அது தொடர்பான மேல்முறையீட்டு மனுவினை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.
ராமர் கோவில் - பாபர் மசூதி விவகாரத்தினை ஒரு நிலப் பிரச்னையாக மட்டுமே பார்க்கிறோம்: உச்ச நீதிமன்றம்! 

புதுதில்லி: ராமர் கோவில் - பாபர் மசூதி விவகாரத்தினை ஒரு நிலப் பிரச்னையாக மட்டுமே பார்க்கிறோம் என்று அது தொடர்பான மேல்முறையீட்டு மனுவினை விசாரிக்கும் உச்ச நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

ராமர் கோவில் - பாபர் மசூதி விவகாரம் தொடர்பான வழக்கில் 2010-ஆம் ஆண்டு அலஹாபாத் உயர் நீதிமன்றமானது, சர்ச்சைக்குரிய நிலத்தை மனுதாரர்களான நிர்மோய் அகாரா அமைப்பு, ராமர் கோவில் மற்றும் உத்தரப் பிரதேச சன்னி வக்ப் போர்ட் ஆகிய மூவருக்கும் பிரித்து அளித்து தீர்ப்பளித்தது.

ஆனால் இந்த தீப்பினை எதிர்த்து மனுதாரர்கள் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தனர். இந்த மனுவானது வியாழனன்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா, நீதிபதிகள் அசோக் பூஷன் மற்றும் அப்துல் நசீர் அடங்கிய அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்பொழுது வழக்கினை தினசரி விசாரிக்க வேண்டும் என்று மனுதாரர்கள் சார்பில் வேண்டுகோள் வைக்கப்பட்டது. அதற்கு பதிலளித்து நீதிபதிகள் கூறியதாவது:

வழக்கினை தினசரி விசாரிக்க வேண்டும் என்ற மனுதாரர்கள் கோரிக்கையினை ஏற்க இயலாது. ஒரு நாளில் எங்களுக்காக 700 ஏழை மனுதாரர்கள் காத்துக் கொண்டிருக்கின்றனர். அவர்களுடைய வழக்குகளை நாங்கள் விசாரிக்க வேண்டும். அடுத்தமுறை ஆஜராகும் பொழுது வழக்கு தொடர்பான ஆவணங்களை மொழிபெயர்த்து நீதிமன்றத்தில் சமர்ப்பியுங்கள்.

இவ்வாறு தெரிவித்த நீதிபதிகள் வழக்கு விசாரணையை மார்ச் 14-ஆம் தேதிக்கு ஒத்தி வைத்து உத்தரவிட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com