இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

மணிப்பூர் தீவிரவாதி தில்லியில் கைது: என்ஐஏ நடவடிக்கை

மணிப்பூரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நேமிசந்த் மெய்தி (22) என்பவரை தேசியப் புலானாய்வு அமைப்பினர் (என்ஐஏ) வியாழக்கிழமை கைது செய்தனர்.

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:44 pm

DIN

மணிப்பூரில் தடை செய்யப்பட்ட பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த நேமிசந்த் மெய்தி (22) என்பவரை தேசியப் புலானாய்வு அமைப்பினர் (என்ஐஏ) வியாழக்கிழமை கைது செய்தனர்.
மணிப்பூரில் கடந்த 2015-ஆம் ஆண்டில் பயங்கரவாதிகள் நடத்திய குண்டு வெடிப்பில் 18 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தில் நேமிசந்த்துக்கு முக்கியத் தொடர்பு உண்டு.
தில்லியில் அவர் எந்த இடத்தில் கைது செய்யப்பட்டார் என்பதை என்ஐஏ அதிகாரிகள் தெரிவிக்கவில்லை. எனினும், அவர் காங்கிலிபாக் கம்யூனிஸ்ட் கட்சி (நோயோன்) என்ற பயங்கரவாத அமைப்பில் இணைந்து தீவிரமாக செயல்பட்டு வந்தார். கடந்த 2015-ஆம் ஆண்டு மணிப்பூரில் ராணுவ வீரர்கள் சென்ற வாகனத்தைக் குறிவைத்து சாலையின் இருபுறமும் வெடிகுண்டுகள் நிரப்பிய கேன்களை வைத்து பயங்கரவாதிகள் வெடிக்கச் செய்தனர். இதில் 18 ராணுவ வீரர்கள் உடல் சிதறி உயிரிழந்தனர். மேலும் 16 பேர் படுகாயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் நேமிசந்துக்கு முக்கிய தொடர்பு உண்டு. இது தவிர மணிப்பூரில் ஒரு கிராமத்துக்குள் புகுந்து பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலிலும் நேமிசந்த் மீது குற்றம்சாட்டு உள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
நேமிசந்த்தை என்ஐஏ, கோர்க்கா ரைபிள்ஸ் படைப்பிரிவு, மணிப்பூர் காவல்துறை ஆகியவற்றின் அதிகாரிகள் இணைந்து தடுப்புக் காவலில் வைத்து விசாரித்து வருகின்றனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.