இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

2 ஜி வழக்கு: விடுவிக்ககோரி மூத்த வழக்குரைஞர் மனு

நாடுமுழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராவதிலிருந்து தன்னை விடுவிக்குமாறு மூத்த வழக்குரைஞர் ஆனந்த்

News image
Updated On :22 பிப்ரவரி 2018, 7:38 pm

DIN

நாடுமுழுவதும் பல்வேறு நீதிமன்றங்களில் உள்ள 2 ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு தொடர்பான வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராவதிலிருந்து தன்னை விடுவிக்குமாறு மூத்த வழக்குரைஞர் ஆனந்த் குரோவர் உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார்.
2ஜி அலைக்கற்றை ஒதுக்கீடு வழக்குகளில் அரசு தரப்பில் சிறப்பு வழக்குரைஞராக கடந்த 2014-ஆம் ஆண்டு ஆனந்த் குரோவர் நியமிக்கப்பட்டார். இவரது பெயரை அட்டார்னி ஜெனரல் கே.கே.வேணுகோபால் பரிந்துரைத்திருந்தார். இந்நிலையில், 2ஜி வழக்குகளில் அரசு தரப்பில் ஆஜராவதிலிருந்து தன்னை விடுவிக்குமாறு உச்ச நீதிமன்றத்தை ஆனந்த் குரோவர் அணுகியுள்ளார்.
அவர் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது: 2 ஜி வழக்கில் அண்மையில் தீர்ப்பு வெளியானது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் அனைவரும் விடுவிக்கப்பட்டனர். அதைத் தொடர்ந்து, அந்த வழக்கில் மேல்முறையீடு செய்வதற்காக சிறப்பு கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை மத்திய அரசு நியமித்துள்ளது. இதற்கான உத்தரவை பணியாளர் பயிற்சி துறை கடந்த 8-ஆம் தேதி பிறப்பித்தது. எனவே, என்னை அனைத்து 2ஜி வழக்குகளிலிருந்து விடுவிக்குமாறு உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.