குடியரசு தலைவர் மாளிகையில் இப்தார் விருந்து இல்லை !
குடியரசுத் தலைவர் மாளிகையில் இப்தார் விருந்து நிகழ்ச்சியை நடத்துவதில்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார்.


குடியரசுத் தலைவர் மாளிகையில் இப்தார் விருந்து நிகழ்ச்சியை நடத்துவதில்லை என்று குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் முடிவு செய்துள்ளார்.
தில்லியில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகையில் முஸ்லிம் மதத் தலைவர்களுக்கும், அரசியல் தலைவர்களுக்கும் குடியரசுத் தலைவர் ஆண்டுதோறும் ரமலான் மாத இறுதியில் இப்தார் விருந்து அளிப்பது வழக்கம். குடியரசுத் தலைவராக அப்துல் கலாம் பதவி வகித்தபோது (2002 முதல் 2007 வரை), அதை நிறுத்தி வைத்திருந்தார். இப்தார் விருந்துக்காக ஒதுக்கப்பட்ட நிதியை, அனாதை காப்பகங்களுக்கு அளிக்க அவர் உத்தரவிட்டார்.
அதன்பிறகு, குடியரசுத் தலைவர்களாக பதவி வகித்த பிரதீபா பாட்டீல், பிரணாப் முகர்ஜி ஆகியோர் இப்தார் விருந்தை மீண்டும் கொண்டு வந்தனர். இந்நிலையில், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், இப்தார் விருந்து நிகழ்ச்சியை நடத்துவதில்லை என முடிவு செய்துள்ளார். இதை அவரது பத்திரிகை தொடர்புத் துறை செயலர் அசோக் மாலிக்கும் உறுதி செய்துள்ளார். அவர் கூறுகையில், 'குடியரசுத் தலைவர் மாளிகையானது, மதச்சார்பற்ற நாட்டின் தோற்றமாகும். மதம், நிர்வாகம் தொடர்பான விவகாரங்களை தனித்தனியாக வைத்திருக்க வேண்டும். வரி செலுத்துவோர் பணத்தில், குடியரசுத் தலைவர் மாளிகையில் மதம் தொடர்பான நிகழ்ச்சி நடத்தப்பட மாட்டாது' என்றார்.
கிறிஸ்துமஸ் பண்டிகையின்போது குடியரசுத் தலைவர் மாளிகையில் கரோல் பாடும் நிகழ்ச்சியும் கடந்த ஆண்டு நடத்தப்படவில்லை.
மத்திய அரசு பதில்: ராம்நாத் கோவிந்த் முடிவு குறித்து மத்திய சிறுபான்மைத் துறை அமைச்சர் முக்தார் அப்பாஸ் நக்வியிடம் கேட்கப்பட்டது. அதற்கு நக்வி பதிலளிக்கையில், 'அது குடியரசுத் தலைவரின் சொந்த முடிவு; இதில் மத்திய அரசுக்கு பங்கில்லை' என்றார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...