போர் விமானம் நொறுங்கியது: விமானி பலி
குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் விழுந்து நொறுங்கியதில், விமானி சஞ்சய் சௌஹான் உயிரிழந்தார்.


குஜராத் மாநிலம், கட்ச் மாவட்டத்தில் இந்திய விமானப் படைக்குச் சொந்தமான போர் விமானம் விழுந்து நொறுங்கியதில், விமானி சஞ்சய் சௌஹான் உயிரிழந்தார்.
இதுகுறித்து பாதுகாப்புப் படை செய்தித்தொடர்பாளர் கூறியதாவது: குஜராத்தின் ஜாம்நகரில் உள்ள இந்திய விமானப் படை தளத்தின் உயரதிகாரி சஞ்சய் சௌஹான், போர்விமானத்தில் செவ்வாய்க்கிழமை வழக்கமான பயிற்சியில் ஈடுபட்டார். பரேஜா என்ற கிராமம் அருகே சென்றுகொண்டிருந்தபோது திடீரென போர் விமானம் கீழே விழுந்து நொறுங்கியது. இதில், அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று அந்தச் செய்தித்தொடர்பாளர் தெரிவித்தார். விமானத்தின் பாகங்கள் அந்த பகுதியில் சிதறி விழுந்ததில் சில மாடுகள் உயிரிழந்தன என்று உள்ளூர் மக்கள் தெரிவித்தனர்.
மீட்பு பணிகளுக்காக பாதுகாப்புப் படையினர் அந்தப் பகுதியில் முகாமிட்டுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...