நீட் போராட்ட வழக்கு ரத்து: பினராயி விஜயன் கடிதத்தை உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பிய வி.டி. சதீசன்தமிழ்த்தாய் வாழ்த்துக்கு 3 ஆம் இடம்: ஆளுநர் ஆர்லேகருக்கு தவெக கண்டனம்!ஜப்பானில் 7.1 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் - சுனாமி எச்சரிக்கையார் தடுத்தாலும் தாய்த் தமிழுக்கே முதலிடம்: தவெக டாலருக்கு நிகரான ரூபாயின் மதிப்பு 11 காசுகள் உயர்ந்து ரூ. 95.88 ஆக நிறைவு!ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியிலும் சரிந்து நிறைவடைந்த இந்திய பங்குச் சந்தை!இ20 பெட்ரோல் பயன்படுத்தினால் காப்பீடு நிராகரிப்பு? மத்திய அரசு சொல்லும் விளக்கம்மாணவர்கள் என்ன தீவிரவாதிகளா? தவறுக்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்: பிரியங்காஜப்பானில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்புபோராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்கள் விடுதலை; காவல்துறை தாக்குதல் குறித்து விசாரணை: உச்ச நீதிமன்றம்
/

கச்சா எண்ணெய் கையிருப்பு உறுதி செய்யப்படும்: மத்திய அரசு தகவல்

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய அமெரிக்கா கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் கையிருப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும்

Updated On :30 ஜனவரி 2024, 9:35 pm IST

ஈரானில் இருந்து கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய அமெரிக்கா கட்டுப்பாடு விதித்துள்ள நிலையில், இந்தியாவின் கச்சா எண்ணெய் கையிருப்பை உறுதி செய்வதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குறிப்பாக, மாற்று இடத்தில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதற்கான முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் கூறியுள்ளது. ஈரான் நாட்டில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை நவம்பர் 4-ஆம் தேதிக்குள் உலக நாடுகள் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும், இல்லையேல் பொருளாதார தடைகளை சந்திக்க நேரிடும் என்றும் அமெரிக்கா எச்சரிக்கை விடுத்துள்ளது. அணு ஆயுத ஆராய்ச்சியை ஈரான் கைவிட மறுப்பதால் இந்த தடை விதிக்கப்படுவதாக அமெரிக்கா கூறியுள்ளது.
இறக்குமதி ரத்து?: அமெரிக்காவின் இந்த அறிவிப்பு குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன், மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சக அதிகாரிகள் தில்லியில் வியாழக்கிழமை ஆலோசனை நடத்தினர்.
இதுகுறித்து பின்னர் அதிகாரிகள் தெரிவிக்கையில், ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதியை முற்றாக ரத்து செய்வது இயலாத காரியம் என்று கூறினர். அதே சமயம், இந்த விவகாரம் குறித்து எண்ணெய் நிறுவனங்களுடன், மத்திய வெளியுறவுத் துறை அமைச்சகம் அடுத்த வாரம் ஆலோசனை நடத்தவுள்ளது என்றும், அதன் பிறகே இறுதி முடிவு எடுக்கப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வெளியுறவு அமைச்சகம் விளக்கம்: இதனிடையே, நாட்டின் கச்சா எண்ணெய் கையிருப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று வெளியுறவுத் துறை அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது.
இதுதொடர்பாக வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் கூறியதாவது:
நவம்பர் 4-ஆம் தேதிக்குள் ஈரானில் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்வதை ரத்து செய்ய வேண்டும் என்று அமெரிக்கா கூறியிருக்கிறது. ஆனால், அந்நாட்டுடனான உறவை முறித்துக் கொள்வது குறித்து எதையும் தெரிவிக்கவில்லை.
குறிப்பாக, அமெரிக்காவின் கட்டுப்பாடு இந்தியாவுக்கு மட்டுமானது அல்ல. உலகின் அனைத்து நாடுகளுக்கும் அது பொருந்தும். தற்போதைய சூழலைப் பொருத்தவரையில், நாட்டின் கச்சா எண்ணெய் இருப்பை உறுதி செய்வதற்கான அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டு வருகிறோம். 
மேலும், மாற்று ஏற்றுமதியாளர்களுடன் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. நாட்டின் எண்ணெய் கையிருப்பை எக்காரணத்தைக் கொண்டும் குறைய விடமாட்டோம் என்றார் அவர்.

நாட்டு நலன் பாதுகாக்கப்படும்'
கச்சா எண்ணெய் இறக்குமதி குறித்து மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறுகையில், நமது நாட்டு நலனை பாதுகாக்கும் வகையில் அரசு நடவடிக்கை எடுக்கும்'' என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.