நாடாளுமன்ற நிலைக்குழு அறிக்கைகள் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்தது.
இதுதொடர்பாக சமூக ஆர்வலர் கல்பனா மேத்தாவும், அமைப்பு ஒன்றும் உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனுக்களைத் தாக்கல் செய்திருந்தன.
அந்த மனுக்கள் நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, ஏ.எம்.கான்வில்கர், டி.ஒய்.சந்திரசூட், அசோக் பூஷண் ஆகியோர் கொண்ட அமர்வு முன்பு புதன்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, நீதிபதிகள் கூறியதாவது:
நாடாளுமன்றக் குழுக்களின் அறிக்கைகளுக்கு எதிராக பதிவு செய்யப்படும் வழக்குகளை வேண்டுமானால் நாங்கள் விசாரிப்போம்.
ஆனால், அந்த அறிக்கைகளின் மீதான நம்பகத்தன்மையை கேள்விக்குள்படுத்த முடியாது. ஜனநாயகத்தின் மூன்று தூண்களுக்கும் (நீதித் துறை, நாடாளுமன்றம், நிர்வாகம்) அரசமைப்புச் சட்டத்தில் அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட்டுள்ளது என்று நீதிபதிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
சாக்கடைக் கால்வாயில் தொழிலாளி சடலம் மீட்பு

நெரோகா எஃப்சி வெற்றியுடன் நிறைவு

டேபிள் டென்னிஸ் சம்மேளனம் இடைநீக்கம்- மத்திய விளையாட்டு அமைச்சகம் நடவடிக்கை

நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்களின் குரல்கள்!
விடியோக்கள்

கதை, வசனம், பாடல்! பேரவையில் கலக்கும் அமைச்சர் மரிய வில்சன்! | TN Assembly | TVK



