கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ஸ்ரீநகரில் சாலையில் வாகனம் கவிழ்ந்து விபத்து: 19 மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்கள் காயம்

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 19 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

News image
Updated On :27 மே 2018, 7:13 am

DIN

ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களை ஏற்றிச் சென்ற வாகனம் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், 19 வீரர்கள் படுகாயம் அடைந்தனர்.

ஜம்மு காஷ்மீரின் ஸ்ரீநகரில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களை ஏற்றிக் கொண்டு கவச வாகனம் ஒன்று சாலையில் சென்று கொண்டு இருந்தது. அப்பொழுது சிலர் வாகனத்தின் மீது கற்களை வீசி எறிந்துள்ளனர்.  இதனால் வாகன ஓட்டுநர் நிலைதடுமாறியதன் காரணமாக வாகனம் தனது கட்டுப்பாட்டினை இழந்தது. இதனை தொடர்ந்து வாகனம் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

இந்த விபத்தில் அதில் பயணம் செய்த மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர்களில் 19 பேர் காயமடைந்து உள்ளனர்.  மீட்கப்பட்ட அவர்கள் சிகிச்சைக்காக அருகிலுள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.