தெலங்கானாவில் நடைபெறவுள்ள பேரவைத் தேர்தலில் போட்டியிடும் திருநங்கை வேட்பாளர் திடீரென மாயமானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பகுஜன் இடதுசாரி அமைப்பு சார்பாக சந்திரமுகி எனும் திருநங்கை கோஷாமஹால் தொகுதியல் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். இந்நிலையில், செவ்வாய்கிழமை அதிகாலை முதல் அவர் திடீரென மாயமானதால் அப்பகுதியில் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மத்தியில் இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அதுமட்டுமல்லாமல் அப்பகுதி திருநங்கை அமைப்புக்கும் இது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதனிடையே அன்றைய தினம் காலை 7 மணியளவில் அவருடைய ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். மேலும் அந்த பதிவு தொடர்பாக கேள்வி எழுப்பியவர்களுக்கும் பதிலளித்துள்ளார். ஆனால், அவரது வீடு பூட்டியிருந்ததாகவும், செல்போன் தொடர்பும் துண்டிக்கப்பட்டுள்ளதாக திருநங்கை செயல்பாட்டாளர் பிட்டு கார்த்திக் போலீஸாரிடம் புகார் அளித்துள்ளார்.
இந்நிலையில், அவர் தேர்தலில் போட்டியிடுவது பிடிக்காத மற்றும் திருநங்கை சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாகவே சிலர் அவரை கடத்தியிருக்கலாம் எனவும் கார்த்திக் தெரிவித்தார். திருநங்கை சந்திரமுகி வசிக்கும் பகுதியில் அமைந்துள்ள கண்காணிப்பு கேமரா உதவியுடன் விசாரணை நடத்தி வருவதாக போலீஸார் தெரிவித்துள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
தொடர்புடையது

மேற்கு வங்கத்தில் ராஜ்நாத் சிங் சாலைவலம்!

முதலீடு செய்யப் போகிறீர்களா? இந்த 10 விஷயங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்!

தேனியில் பட்டாசு ஆலையில் வெடி விபத்து: 2 பேர் பலி

நீரைக் கண்ட குழந்தைபோல்.. குதூகலமாக ஆட்டம் போட்ட கோயில் யானை பிரக்ருதி!
வீடியோக்கள்

வெற்றி உற்சாகத்தில் ஆர்சிபி கோலி | IPL 2026 | RCB | GT | RCB VS GT | Virat kohli
தினமணி செய்திச் சேவை

வாக்கு சதவீதம் உயர்வுக்கு Vijay காரணமா?
தினமணி செய்திச் சேவை

வெள்ளை அறிக்கை வேண்டும்! சிசிடிவி காட்சியை வெளியிட்ட செல்வப்பெருந்தகை! | IT RAID | Congress
இணையதளச் செய்திப் பிரிவு

வரலாறு காணாத வாக்குப்பதிவா? | N Gopalaswami Interview | TN Election 2026 | Vote percentage in tamil nadu
தினமணி செய்திச் சேவை


