சிபிஐ விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை வரவேற்கும் அருண் ஜேட்லி

சிபிஐ விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு வழங்கியிருக்கும் அறிவுறுத்தல்களின் காரணமாக, விசாரணை விரைவாகவும், உண்மை சந்தேகத்துக்கு இடமின்றியும் வெளியாகும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.
சிபிஐ விவகாரத்தில் உச்ச நீதிமன்றத்தின் தலையீட்டை வரவேற்கும் அருண் ஜேட்லி
Updated on
1 min read


புது தில்லி: சிபிஐ விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தலையிட்டு வழங்கியிருக்கும் அறிவுறுத்தல்களின் காரணமாக, விசாரணை விரைவாகவும், உண்மை சந்தேகத்துக்கு இடமின்றியும் வெளியாகும் என்று மத்திய நிதித்துறை அமைச்சர் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

சிபிஐ இயக்குநர்களின் புகார் மீது இரண்டு வாரத்தில் விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யுமாறு உச்ச நீதிமன்றம் அறிவுறுத்தியிருப்பதன் வாயிலாக நியாயமான விசாரணை நடைபெறவும், உண்மை விவரம் வெளியாகவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. உச்ச நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதியை நியமித்திருப்பதன் வெளிப்படையான உண்மை விவரம் வெளியாகும் என்றும் அருண் ஜேட்லி கூறியுள்ளார்.

சிபிஐ இயக்குநர் அலோக் குமார் வர்மா, கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தற்காலிக இயக்குநர் நாகேஸ்வர ராவ், கொள்கை முடிவெடுக்க தடை விதித்திருப்பதோடு, மனு மீது பதிலளிக்குமாறு சிபிஐ, மத்திய அரசு மற்றும் மத்திய விசாரணை ஆணையம் உள்ளிட்டவற்றுக்கு நோட்டிஸ் அனுப்பியுள்ளது.

விசாரணையை 2 வாரத்துக்குள் முடித்து அறிக்கை  தாக்கல் செய்யவும், விசாரணையை ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதிபதியையும் உச்ச நீதிமன்றம் நியமித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com