திருச்சி மாவட்டத்தில் திரும்பிப் பார்க்க வைத்த திருவெறும்பூர் தொகுதி! காரணம் என்ன?வாக்குச்சாவடியாகும் பள்ளிகளை சுத்தம் செய்வது யார் பொறுப்பு?கடந்த ஆண்டு பள்ளியில் ஆசிரியை கொலை! பழிக்குப் பழியாக இளைஞரைக் கொன்ற தந்தை!!யமுனையில் படகு சவாரி செய்து பாருங்கள்! மோடியைக் கேலி செய்த மமதா!வாக்களித்த பிறகு சென்னை திரும்பும் மக்கள்! பேருந்து, ரயில்களில் அலைமோதும் பயணிகள் கூட்டம்!வெற்றி வாய்ப்பு எப்படி இருக்கிறது? மதுரையில் மு.க. ஸ்டாலின் பதில்! புதிய கட்சி தொடங்கினார் சந்திரசேகர் ராவின் மகள் கவிதா! தமிழ்நாட்டில் எந்த வாக்குச்சாவடியிலும் மறு வாக்குப்பதிவு இல்லை! - தேர்தல் ஆணையம்தங்கம் விலை சவரனுக்கு ரூ. 800 உயர்வு! வெள்ளி விலையும் உயர்ந்தது!
/

பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து 13ஆவது நாளாக குறைப்பு

பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து 13ஆவது நாளாக இன்று செவ்வாய்கிழமையும் (அக்.30) குறைக்கப்பட்டுள்ளது.

News image
Updated On :30 அக்டோபர் 2018, 4:04 am



பெட்ரோல்-டீசல் விலை தொடர்ந்து 13ஆவது நாளாக இன்று செவ்வாய்கிழமையும் (அக்.30) குறைக்கப்பட்டுள்ளது.

பெட்ரோல் விலை லிட்டருக்கு இன்று 21 காசுகளும், டீசல் விலை லிட்டருக்கு 8 காசுகளும் எண்ணெய் நிறுவனங்களால் குறைக்கப்பட்டன. இந்த விலை குறைப்பைத் தொடர்ந்து, தில்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.79.55 ஆகவும். டீசல் விலை லிட்டருக்கு ரூ.73.78 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. 

மும்பையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.85.04-க்கு விற்கப்பட்டது. டீசல் விலை லிட்டருக்கு ரூ.77.32 ஆக விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.82.65-க்கும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.78 ஆகவும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதுபோல், எண்ணெய் நிறுவனங்களால் பெட்ரோல்-டீசல் விலை குறைக்கப்படுவது இது 13ஆவது நாளாகும். 

நாடு முழுவதும் பிற நகரங்களிலும் பெட்ரோல்-டீசல் விலை புதிய உச்சத்தை தொட்டது. இதைத் தொடர்ந்து, பெட்ரோல்-டீசல் விலை மீதான கலால் வரியில் ரூ.2.50-ஐ மத்திய அரசு குறைத்தது. பிற மாநிலங்களையும் வாட் வரியை குறைக்கும்படி மத்திய அரசு கேட்டுக் கொண்டது.

இதையடுத்து, பாஜக ஆளும் மாநிலங்கள் மட்டும் பெட்ரோல்-டீசல் விலை மீதான வாட்  வரியை குறைத்தன. இதன்பிறகு, சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை அதிகரித்ததையடுத்து, பெட்ரோல்-டீசல் விலை மீண்டும் உயரத் தொடங்கியது. எனினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய்யின் விலை குறையத் தொடங்கியதால், கடந்த 18 ஆம் தேதி முதல் பெட்ரோல்-டீசல் விலை இந்தியாவிலும் குறைக்கப்பட்டது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.