தமிழ்நாட்டில் அதிகரிக்கும் டெங்கு! இதுவரை 17,348 பேர் பாதிப்பு!தொடர் சரிவில் தங்கம் விலை! இன்றைய நிலவரம்வடகிழக்கு பருவமழை: மாவட்ட ஆட்சியர்களுடன் முதல்வர் விஜய் 2-வது நாளாக ஆலோசனை!புதிய சொத்துக்குவிப்பு வழக்கில் இருந்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வத்தை விடுவிக்க மறுப்புகாமராஜர் காலை உணவுத் திட்டம்: முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்!பொன்னேரியில் மருத்துவமனை ஊழியரை பெட்ரோல் ஊற்றி கொல்ல முயன்றவர் சுட்டுப்பிடிப்புமேற்கு தொடா்ச்சி மலை மாவட்டங்களில் மழை வாய்ப்பு2027 மாா்ச்-க்குள் 1 லட்சம் வீடுகளில் மேற்கூரை சூரியசக்தி மின்சாரம்: நிர்மல்குமாா்தனியாா் பேருந்து கட்டண உயா்வு: தமிழக அரசு அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவு

காஷ்மீர் சிறப்புச் சட்ட விவகாரம்: அரசு வழக்குரைஞரை நீக்க முக்கிய கட்சிகள் வலியுறுத்தல்

காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் தொடர்பான வழக்கில் அந்த மாநிலத்தின் சார்பில் ஆஜராகி வாதாடி வரும் கூடுதல்

Published On :


காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டம் தொடர்பான வழக்கில் அந்த மாநிலத்தின் சார்பில் ஆஜராகி வாதாடி வரும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தாவை நீக்க வேண்டும் என்று பல்வேறு கட்சிகள் வலியுறுத்தியுள்ளன.
தேசிய மாநாட்டு கட்சி தலைவர் ஃபரூக் அப்துல்லா தலைமையில் காஷ்மீரில் வியாழக்கிழமை நடைபெற்ற அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டது.
முன்னதாக அக்கூட்டத்தில் காங்கிரஸ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்த பிரதிநிதிகள் கலந்துகொண்டனர். அதேவேளையில் மாநிலத்தின் முக்கியக் கட்சியான பிடிபி அக்கூட்டத்தை புறக்கணித்தது. முன்னாள் முதல்வர் மெஹபூபா முஃப்தி தலைமையிலான அக்கட்சி, கூட்டத்தில் பங்கேற்காதது குறித்து விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது.
அனைத்துக் கட்சிக் கூட்டத்தின் முக்கிய நிரல்கள் எதுவும் முறையாக தங்களுக்கு தெரிவிக்கப்படாததால் அதில் கலந்துகொள்ளவில்லை என்று பிடிபி தெரிவித்துள்ளது. கடந்த சில மாதங்களுக்கு முன்பு காஷ்மீரில் மெஹபூபா தலைமையிலான கூட்டணி அரசுக்கு அளித்து வந்த ஆதரவை பாஜக வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து அங்கு ஆளுநர் ஆட்சி அமல்படுத்தப்பட்டது. இது அந்த மாநில அரசியல் அரங்கில் பல்வேறு திருப்பங்களுக்கு வித்திட்டது.
இதற்கு நடுவே, காஷ்மீருக்கு அரசியல் சாசனத்தில் அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்துக்கான பிரிவு 35-ஏ விதி சட்டப்பூர்வமாக செல்லுத்தக்கதுதானா? எனக் கேட்டு உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு மீதான விசாரணை முக்கிய கட்டத்தை எட்டியுள்ளது. விரைவில் அதன் விசாரணை நிறைவடைந்து தீர்ப்பு வெளியாகக்கூடும் எனத் தெரிகிறது.
இதுதொடர்பாக கருத்து தெரிவித்து வரும் அந்த மாநிலத்தின் பிரதான கட்சிகள், காஷ்மீருக்கு அளிக்கப்பட்டிருக்கும் சிறப்பு அந்தஸ்தை பறிக்க மத்திய பாஜக அரசு தீவிரமாக முயன்று வருவதாக குற்றம்சாட்டியுள்ளன. அதில் உச்சமாக, அடுத்த சில வாரங்களில் காஷ்மீரில் நடைபெறவுள்ள நகர உள்ளாட்சி மற்றும் பஞ்சாயத்து தேர்தலைப் புறக்கணிப்பதாக பிடிபி மற்றும் தேசிய மாநாட்டு கட்சி ஆகியவை அறிவித்துள்ளன.
மாநிலத்தின் பிரதான கட்சிகளே போட்டியில் இல்லாததால் அங்கு பிரசாரம் எதுவும் களைகட்டவில்லை. இருப்பினும், திட்டமிட்டபடி தேர்தல் நடைபெறும் என்று மாநில நிர்வாகம் அறிவித்துள்ளது. இந்தச் சூழலில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் ஃபரூக் அப்துல்லா இல்லத்தில் அனைத்துக் கட்சிக் கூட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது. அதில் பல்வேறு விவகாரங்கள் குறித்து விவாதிக்கப்பட்டதாகத் தெரிகிறது. கூட்டத்துக்குப் பிறகு அக்கட்சியின் துணைத் தலைவர் ஒமர் அப்துல்லா செய்தியாளர்களிடம் கூறியதாவது:
காஷ்மீர் சிறப்பு அந்தஸ்து சட்டத்தால் பெண்கள் பாகுபடுத்தப்படுவதாக மாநிலத்தின் சார்பில் ஆஜராகியுள்ள கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார். மத்திய அரசின் வழக்குரைஞராக அவர் இருந்தாலும், குறிப்பிட்ட மாநிலத்தின் சார்பில் ஆஜராகும்போது அந்த மாநிலத்தின் நலனுக்காக மட்டுமே வாதாட வேண்டும். மாறாக, சொந்தக் கருத்துகளையோ அல்லது வேறு ஏதோ ஒரு கட்சியின் (பாஜக) கருத்தையோ தெரிவிக்கக் கூடாது. இந்த வழக்கில் வாதாடுவதில் இருந்து அவரை நீக்க வேண்டும் என்றும், சிறப்பு அந்தஸ்து சட்டத்தை பாதுகாக்க வேண்டும் என்றும் அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் ஒருமனதாக முடிவு செய்யப்பட்டது என்றார் அவர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.