ஜூலை மாதத்தில் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை கடும் சரிவு 

ஜூலை மாதத்தில் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனையானது 31 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
ஜூலை மாதத்தில் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனை கடும் சரிவு 

புது தில்லி: ஜூலை மாதத்தில் உள்நாட்டில் பயணிகள் வாகன விற்பனையானது 31 சதவீதம் சரிவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஆட்டோ மொபைல் துறை உற்பத்தி மற்றும் விற்பனை சார்ந்த புள்ளிவிபரங்கள், வாகன உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு மூலமாக வெளியாகியுள்ளன. அவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:

வாகன விற்பனையானது 9 மாதங்களாக தொடர்ந்து சரிவில் இருந்து வருகிறது. 

ஜூலை மாதத்தில் உள்நாட்டில் மோட்டார் சைக்கிள் மற்றும் கார் உள்ளிட்ட பயணிகள் வாகன விற்பனை 30.9 சதவீதம் சரிவைச் சந்தித்துள்ளது. 

இதனால் ஆட்டோ மொபைல் துறை கடும் நெருக்கடியை சந்தித்துள்ளதுடன், மிகப்பெரும் வேலையிழப்பு அபாயத்தையும் எதிர் நோக்கியுள்ளது.

குறிப்பாக ஜூலை மாதத்தில் 2,00,790  பயணிகள் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது.

அதேநேரம் ஜூலை மாதத்தில் பயணிகள் வாகனத் தயாரிப்பு  17 சதவீதம்  குறைக்கப்பட்டுள்ளது.  

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com