மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

செப். 7-ஆம் தேதி சந்திரயான் நிலவில் தரையிறங்கும்: இஸ்ரோ தலைவர் கே.சிவன் பேட்டி

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் கடந்த கடந்த ஜூலை 22-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது.

News image
Updated On :13 ஆகஸ்ட் 2019, 5:01 am

DIN

சந்திரனுக்கு அனுப்பப்பட்ட சந்திரயான்-2 விண்கலம் செப்டம்பர் 7 ஆம் தேதி நிலவில் தரையிறக்கப்பட்டு ஆராய்ச்சியில் ஈடுபடுத்தப்படும் என இஸ்ரோ தலைவர் கே.சிவன் தெரிவித்தார்.

நிலவின் தென் துருவத்தை ஆய்வு செய்வதற்காக சந்திரயான்-2 விண்கலம் கடந்த கடந்த ஜூலை 22-ஆம் தேதி வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டது. ஐந்து முறை நிலை உயர்த்தப்பட்டு, ஆகஸ்ட் 14 முதல் நிலவை நோக்கிய தனது பயணத்தைத் தொடங்க உள்ளது.

இதுகுறித்து இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத் தலைவர் கே.சிவன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆகஸ்ட் 14-ஆம் தேதி அதிகாலை 3:30 மணியளவில் நிலவை நோக்கிய பயணத்தை சந்திரயான் விண்கலம் தொடங்க உள்ளது. பின்னர் ஆகஸ்ட் 20-ஆம் தேதி முதல் நிலவின் சுற்றுவட்டப் பாதையில் சுற்றிவரும் பணியை தொடங்க உள்ளது. இதையடுத்து செப்டம்பர் 7-ஆம் தேதி நிலவின் தென்துருவத்தில் தரையிறங்கி ஆய்வுகளை மேற்கொள்ளும்.

இதில், ஆர்பிட்டர் என்ற அமைப்பு ஓராண்டுக்கு நிலவை சுற்றிவந்தபடியும், லேண்டர் அமைப்பு நிலவில் தரையிறங்கி, இறங்கிய இடத்தில் இருந்தபடியே 14 நாள்களுக்கும், ரோவர் என்ற 6 சக்கரங்களைக் கொண்ட வாகனம் நிலவின் தரைப் பரப்பில் 14 நாள்கள் 500 மீட்டர் வரை நகர்ந்து சென்றும் ஆய்வுகளை மேற்கொள்ளவுள்ளன என்று தெரிவித்தார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.