காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

தில்லி தீவிபத்தில் சிக்கியவர்களில் பலர் குழந்தைகள்!

தில்லி தொழிற்சாலை தீ விபத்தில் சிக்கியவர்களில் பலர் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.

News image
Updated On :9 டிசம்பர் 2019, 5:31 am

DIN

தில்லி தொழிற்சாலை தீ விபத்தில் சிக்கியவர்களில் பலர் 14 வயதிற்குட்பட்ட குழந்தைகள் என தெரிய வந்துள்ளது.

வடக்கு தில்லியில் உள்ள பரபரப்பான ராணி ஜான்சி சாலையில் அனாஜ் மண்டி எனும் குடியிருப்புகள் உள்ள பகுதியில் இயங்கி வந்த தொழிற்சாலையில் ஏற்பட்ட பயங்கரத் தீ விபத்தில் இதுவரை 43 போ் உயிரிழந்துள்ளனர். 

இன்று அதே தொழிற்சாலையில் மீண்டும் ஒரு தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே 43 பேர் உயிரிழந்த நிலையில், பலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால் மேலும் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. மின்கசிவினால் இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று போலீசார் கூறுகின்றனர். விபத்து குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், தொழிற்சாலை தேவையான பாதுகாப்பு வசதிகளை கொண்டிருக்கவில்லை என்பதும் விபத்துக்கு முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. 

Story image

இந்த நிலையில், விபத்தில் சிக்கியவர்களில் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்களும் இருப்பது தெரிய வந்துள்ளது.

தில்லி லேடி ஹார்டிங்கே மருத்துவக் கல்லூரிக்கு 13 வயது சிறுவனின் உடல் கொண்டுவரப்பட்டுள்ளது. இதன்பின்னரே அந்த சிறுவன் தில்லி அனாஜ் மண்டி தீ விபத்தில் உயிரிழந்தவன் என்று தெரிந்தது. அவரது உறவினர் ஒருவர் இதனை உறுதி செய்தார். மேலும், உயிரிழந்த சிறுவனின் சகோதரனும்(14 வயது) அதே தொழிற்சாலையில்தான் பணிபுரிவதாகவும், அவனைக்  காணவில்லை என்றும் அவனும் தீ விபத்தில் சிக்கியுள்ளனா? எனத் தெரியவில்லை என்றும் போலீசாரிடம் கூறியுள்ளார். 

Story image

அதேபோன்று மற்றொரு நபரும், தனக்கு வேண்டிய இரண்டு சிறுவர்களை தேடுவதாக கூறியுள்ளார். அவர்கள் இருவருமே, கடந்த ஏழு மாதங்களுக்கும் மேலாக அந்தத் தொழிற்சாலையில் பணிபுரிந்து வருகின்றனர் என்றும் அவர் கூறினார். 

சமஸ்திபூரில் வசித்து வரும் ஒருவர், தனது உறவினரின் மகன் ஒருவர் தில்லி தீ விபத்தில் சிக்கி, காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக கூறியுள்ளார். 

இதேபோன்று, தில்லி தீ விபத்தில் உயிரிழந்தவர்கள் மற்றும் காயமடைந்தவர்களில் பலர் 14 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. 14 வயதிற்குட்பட்ட குழந்தைகளை தொழிற்சாலையில் வேலைக்கு வைக்கக்கூடாது என்று சட்டம் அமலில் இருக்கும் நிலையிலும்,  சட்டவிரோதமாக சிறுவர்கள் வேலைக்கு அமர்த்தப்பட்டுள்ளது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. 

Story image

கைலாஷ் சத்யார்த்தி குழந்தைகள் அறக்கட்டளையின் நிர்வாக இயக்குனர் ராகேஷ் செங்கர் பேசும்போது, 'இரண்டு வாரங்களுக்கு முன்புதான், சிதிபுராவில் இதே தொழிற்சாலை பிரிவில் இருந்து 45 குழந்தைகளை நாங்கள் மீட்டோம். குறைந்த ஊதியத்தில் குழந்தைத் தொழிலாளர்கள் தொழிற்சாலைகளில் வேலைக்கு அமர்த்தப்படுகின்றனர்' என்று தெரிவித்தார். 

மேலும், '14 வயதிற்கு குறைவான எந்தக் குழந்தையையும் சட்டப்பூர்வமாக வேலைக்கு அமர்த்தக்கூடாது. அதற்கான விதிமுறைகள் உள்ளன. ஆனால், அதை யாரும் பின்பற்றவில்லை' என்றும் கூறினார். 

2011 இல் நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி தில்லியில் 49,000 குழந்தைத் தொழிலாளர்கள் உள்ளதாக கணக்கிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.