லக்னெளவில் இணைய சேவை முடக்கம் மேலும் இரு நாட்களுக்கு நீட்டிப்பு!
போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக லக்னெளவில் இணையதள சேவை முடக்கம் புதன்கிழமை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.


போராட்டம் மற்றும் வன்முறை காரணமாக லக்னெளவில் இணையதள சேவை முடக்கம் புதன்கிழமை நள்ளிரவு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக நாடு முழுவதும் போராட்டம் வலுப்பெற்று வரும் நிலையில், உத்தரப் பிரதேசத்திலும் கடந்த சில தினங்களாக போராட்டம் நீடித்து வருகிறது. போராட்டம் வன்முறையாக மாறி உயிர்பலிகளும், பொருட்சேதங்களும் நடைபெற்று வருகின்றன. போராட்டத்தில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே, போராட்டத்தை கட்டுப்படுத்தும் பொருட்டு லக்னெள உள்ளிட்ட இடங்களில் இணைய சேவை துண்டிக்கப்பட்டுள்ளது. கடந்த டிசம்பர் 19ம் தேதியில் இருந்து அங்கு இணைய சேவை இல்லாத நிலையில், மாநில அரசு மேலும் இரு நாட்களுக்கு இணைய சேவை முடக்கத்தை நீட்டித்துள்ளது. அதன்படி, தலைநகர் லக்னெளவில் புதன்கிழமை நள்ளிரவு வரை இணைய சேவை வழங்கப்படாது என்று மாவட்ட அதிகாரி தகவல் தெரிவித்துள்ளார்.
மறைந்த முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் பிறந்தநாளான நாளை(டிச.25) அவரது சிலையை லோக் பவனில் பிரதமர் நரேந்திர மோடி திறந்து வைக்கிறார். எனவே, பிரதமர் வருகையையொட்டியும் இணைய சேவை முடக்கம் நீட்டிக்கப்பட்டுள்ளதாக அரசின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...