காங்கிரஸ் மாநிலங்களவை வேட்பாளர் கிறிஸ்டோபர் திலக்! இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ராஜ்நாத் சிங் தலைமையில் பாஜக தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு நியமனம்!

ராஜ்நாத் சிங் தலைமையில் 2019 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, விளம்பர குழு உள்ளிட்ட 17 வகை குழுக்களை பாஜக

News image
Updated On :6 ஜனவரி 2019, 3:23 pm

DIN


புதுதில்லி: ராஜ்நாத் சிங் தலைமையில் 2019 மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, விளம்பர குழு உள்ளிட்ட 17 வகை குழுக்களை பாஜக தலைமை இன்று நியமனம் செய்துள்ளது. 

வரும் மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான பாஜக ஆட்சியை தக்கவைக்க பாஜகவும், ஆட்சியை கைப்பற்ற காங்கிரஸ் கட்சியும் தீவிரமா தேர்தல் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 

இந்நிலையில், சில மாதங்களில் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு, விளம்பர குழு உள்ளிட்ட 17 வகையான குழுக்களின் பொறுப்பாளர்களை பாஜக தலைமை இன்று நியமனம் செய்து அறிவித்துள்ளது. 

தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழுவுக்கு மத்திய உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விளம்பர குழுவிற்கு மத்திய நிதி அமைச்சர் அருண் ஜேட்லி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

இதேபோன்று கட்சியின் மேல்முறையீட்டை தயாரிக்கும் பணிக்குழு, பைக் ரேலி குழு, ஊடகம் மற்றும் சமூக ஊடகங்கள் விளம்பர குழு, தேர்தல் பிரச்சார குழுக்குளுக்கு, மத்திய அமைச்சர்களான நிர்மலா சீதாராமன், ரவிசங்கர் பிரசாத், பியூஷ் கோயல், முக்தார் அப்பாஸ் நக்வி, நிதின் கட்கரி, சுஷ்மா சுவராஜ், பிரகாஷ் ஜாவடேகர் மற்றும் அருண் சிங் தலைமையில் மன் கி பாத் குழு உள்பட பலர் பல்வேறு குழுக்களுக்கு பொறுப்பாளர்களாக நியமனம் செய்யப்பட்டுள்ளனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.