
பெங்களூரு: கர்நாடக விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லை எனவே தமிழகத்திற்கு நீர் வழங்க இயலாது என்று கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
தில்லியில் சமீபத்தில் கூடிய காவிரி ஒழுங்காற்றுக் குழு கூட்டமானது கர்நாடகம் தமிழகத்திற்கு ஜூன் மற்றும் ஜூலை மாதத்தில் வழங்க வேண்டிய நீரை வழங்குவது குறித்து உத்தர வு பிறப்பித்திருந்தது.
அதேசமயம் கடந்த சில தினங்களுக்கு முன்பு பெங்களூருவில் தென்மேற்கு பருவமழை தொடங்கியது. குறிப்பாக உப்பள்ளி, தார்வார், பீதர், பல்லாரி, கொப்பல் உள்ளிட்ட வடகர்நாடக பகுதிகளில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருகிறது.
இந்நிலையில் கர்நாடக விவசாயிகளுக்கே தண்ணீர் இல்லை எனவே தமிழகத்திற்கு நீர் வழங்க இயலாது என்று கர்நாடக நீர்பாசனத்துறை அமைச்சர் சிவகுமார் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக வியாழனன்று பெங்களூவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறியதாவது:
கர்நாடகாவின் நீராதார நிலை குறித்து, காவிரி ஆணையத்திடம் தெளிவாகத் தெரிவித்து விட்டோம். மழை சரியாகப் பொழியவில்லை என்றால் கர்நாடகாவின் நிலை மேலும் மோசமடையும். தற்போது கர்நாடக விவசாயிகளுக்கே, தண்ணீர் இல்லை என்பதால், தமிழகத்திற்கு தண்ணீர் வழங்க இயலாது.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.