இயக்குநர் தக்காளி சீனிவாசன் காலமானார்!எரிவாயு தட்டுப்பாடு எதிரொலி: எல்பிஜி உற்பத்தியை அதிகரிக்கிறோம் - ரிலையன்ஸ் 2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்திமுக, அதிமுக இல்லாத கூட்டணி? ராமதாஸுடன் சசிகலா சந்திப்பு2 நாள்களில் திமுக - தேமுதிக தொகுதிப் பங்கீடு! எல்.கே. சுதீஷ்நாட்டின் கோதுமை உற்பத்தி 2% அதிகரிப்பு! 120 மில்லியன் டன் - மத்திய அரசுசௌதிக்குச் செல்ல மேற்காசியாவில் உள்ள நேபாள மக்களுக்கு அந்நாட்டு அரசு அறிவுறுத்தல்இண்டிகோ விமான நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பீட்டர்ஸ் எல்பர்ஸ் ராஜிநாமாபாகிஸ்தானில் அறிமுகமாகும் 5ஜி: அலைக்கற்றை ஏலம் முடிந்தது!
/

காஷ்மீரில் கடும் துப்பாக்கி சண்டை: 2 பயங்கரவாதிகளை சுட்டு வீழ்த்தியது ராணுவம்

ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கி சண்டையில்  2 பயங்கரவாதிகள்

News image
Updated On :8 நவம்பர் 2019, 9:37 am

DIN


ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதிகளுக்கும் பாதுகாப்புப் படையினருக்கும் இடையே நடந்து வரும் துப்பாக்கி சண்டையில்  2 பயங்கரவாதிகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் பதுங்கியுள்ள பயங்கரவாதிகள், தொடர்ந்து வன்முறைத் தாக்குதல்களில் ஈடுபடுகின்றனர். அவர்களுக்கு தக்க பதிலடி கொடுத்து வருகின்றனர் நமது ராணுவ வீரர்கள். 

இந்நிலையில், புல்வாமா மாவட்டம் டிரால் பகுதியில் உள்ள மிர் மொகல்லா என்ற இடத்தில் பயங்கரவாதிகள் பதுங்கியிருப்பதாக தகவல் கிடைத்ததை அடுத்து விரைந்து சென்ற பாதுகாப்பு படை வீரர்கள், பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த இடத்தை சுற்றி வளைத்தனர். இதனை அறிந்துகொண்ட பயங்கரவாதிகள், பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கியால் சுட்டத் தொடங்கினர். பாதுகாப்பு படையினரும் தக்க பதிலடி கொடுத்து வந்தனர். 

இன்று அதிகாலை பாதுகாப்பு படையினர் முன்னேறி பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வீட்டை குண்டு வீசி தகர்த்தனர். இதில் வீடு தீப்பற்றி எரிந்தது. சில மணி நேரம் நீடித்த இந்த சண்டையில், 2 பயங்கரவாதி கொல்லப்பட்டுள்ளதாகவும், மேலும் 2 பேர் பதுங்கியிருக்கலாம் என்பதால் அப்பகுதியில் தொடர்ந்து தேடுதல் வேட்டையில் ஈடுபட்டு வருகின்றனர்.  

முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக டிரால் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் செல்போன் இணையதள சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.