உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் சுட்டுக் கொலை
உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் அவரது மருமகன் ஆகிய இருவரும் செவ்வாயன்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.


லக்னௌ: உத்தர பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் மற்றும் அவரது மருமகன் ஆகிய இருவரும் செவ்வாயன்று மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.
உத்தர பிரதேச பகுஜன் சமாஜ் கட்சியை சேர்ந்த முக்கியத் தலைவர் ஹாஜி ஆசன். இவரது மருமகன் ஷதாப். செவ்வாயன்று இவர்கள் இருவரும் பிஜ்னோர் மாவட்டம் நஜீபாபாத்தில் உள்ள கட்சி அலுவலகத்தில் இருந்தனர். அப்போது மாலை 3 மணியளவில் வந்த மர்ம நபர்கள் திடீரென அவர்களை நோக்கி துப்பாக்கியால் சுட்டுவிட்டுத் தப்பியோடினர். இதில் அவர்கள் இரண்டு பேரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் தனிப்பட்ட பகையால் இந்த சம்பவம் நடந்துள்ளது என மாவட்ட காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
உத்தர பிரதேசம் அமேதி தொகுதி எம்.பி ஸ்ம்ரிதி இரானியின் உதவியாளர் சுரேந்திரா சிங் ஞாயிறன்று சுட்டுக் கொல்லப்பட்டார். இவ்வாறு நாடாளுமன்றத் தேர்தல் முடிந்த சில நாட்களில் தொடர்ந்து அரசியல் கட்சியினர் கொலை செய்யப்பட்டு வருவது மாநிலத்தில் பரபரப்பினை ஏற்படுத்தி உள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...