தில்லி: கரோனாவில் இருந்து மீண்ட 73 வயது முதியவருக்கு உற்சாக வழியனுப்பு விழா

புது தில்லியில் கரோனா பாதித்து சிகிச்சைப் பெற்று வந்த 73 வயது முதியவர் பூரண குணம் அடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.
தில்லி: கரோனாவில் இருந்து மீண்ட 73 வயது முதியவருக்கு உற்சாக வழியனுப்பு விழா
Updated on
1 min read

புது தில்லி: புது தில்லியில் கரோனா பாதித்து சிகிச்சைப் பெற்று வந்த 73 வயது முதியவர் பூரண குணம் அடைந்து இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினார்.

கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், புது தில்லியில் உள்ள எல்என்ஜேபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த 73 வயது முதியவர் மன்மோஹன் சிங், தொடர் சிகிச்சையின் பலனாக பூரண குணம் அடைந்தார்.

அவருக்கு கரோனா பாதிப்பு முற்றிலும் நீங்கியது மருத்துவப் பரிசோதனையில் உறுதி செய்யப்பட்டதை அடுத்து இன்று அவர் வீடு திரும்பினார். அவரை மருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் ஊழியர்கள் உற்சாகமாக வழியனுப்பி வைத்தனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com