ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

ஜம்மு-காஷ்மீரில் கரோனா பாதிப்பு 354 ஆக உயர்வு

ஜம்மு-காஷ்மீரில் மேலும் நால்வருக்குப் புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில்

News image
Updated On :20 ஏப்ரல் 2020, 6:32 am

PTI

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரில் மேலும் நால்வருக்குப் புதிதாக கரோனா நோய்த் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ள நிலையில் மொத்த பாதிப்பு 354 ஆக உயர்ந்துள்ளதாக அந்நாட்டுச் சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. 

பாதிக்கப்பட்ட நான்கு பேரும் காஷ்மீரைச் சேர்ந்தவர்கள். இவர்களின் சோதனை முடிவுகள் ஞாயிற்றுக்கிழமை இரவு வந்துள்ளது. அவர்களில் மூன்று பேர் பாந்திபோரா மற்றும் ஒருவர் பாரமுல்லாவைச் சேர்ந்தவர்கள். 

ஜம்முவில் 55 பேர் மற்றும் காஷ்மீரில் 299 பேர் என மொத்த 354 பேர் இதுவரை கரோனாவுக்கு பாதிக்கப்பட்டுள்ளனர். ஐந்து பேர் பலியாகியுள்ள நிலையில் ஜம்மு-காஷ்மீரில் 56 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 

அரசு சார்பில் மற்றும் வீட்டு தனிமைப்படுத்தப்பட்டவர்கள் உள்பட 61 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கண்காணிப்பில் வைக்கப்பட்டுள்ளனர். இதற்கிடையில், காஷ்மீரில் 33வது நாளாக ஊரடங்கு உத்தரவு தொடர்ந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

காஷ்மீர் முழுவதும் கட்டுப்பாடு மற்றும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டும், பல பகுதிகள் சிவப்பு மண்டலங்களாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.